Showing posts with label SOCIAL JUSTICE. Show all posts
Showing posts with label SOCIAL JUSTICE. Show all posts

Wednesday, August 21, 2013

AIIEA IN PAPPANKULAM VILLAGE IN SUPPORT OF DALIT VICTIMS


    
At pappankulam village of Sivagangai district - Com G. Meenakshisundaram President, 
Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division with Com K. Samuelraj, geneal secretary, TNUEF. 

On the Independence day (15.08.2013)  22 houses of dalits were demolished  at Pappankulam village of Sivagangai  district (45 km from Madurai) by the authorities citing the reasons of encroachment. But dalit people alleged that the demolition was done at the instigation of Panchayat president with caste venom. According to dalit victims, Panchayat President developed antagonism towards dalits under the impression that they had not voted for him in local body elections. Dalit victims claim that they are having pattas for the houses and relevant documents also. Three houses were constructed under Indira Awas Yojana. ( Courtesy: THEEKATHIR- 21.08.2013).

The leaders of Madurai divisional unit & Madurai GI regional unit of ALL INDIA INSURANCE EMPLOYEES ASSOCIATION Com G Meenakshisundaram, President, ICEU, Madurai Division, Com S. Balasubramanian Joint secretary, GIEA-SZ, Com N. Sureshkumar, General secretary, ICEU, Madurai division, Com N.P.Rameshkannan, Joint secretary, Com S. Thanigairaj, Assistant Treasurer, and Com A. Govindarajan visited the village yesterday ( 20th August 2013) as a part of the fact finding team of the  Tamilnadu Untouchability Eradication Front (TNUEF) and documented house by house the losses suffered by the victims by staying in the village for whole day till late night. Lawyers from Madurai HC bench were also involved. The team led by Com K. Samuelraj, General secretary, TNUEF and Com K. Beemarao MLA, CPI-M assured the dalit victims that their issue would be taken up organisationally and legally by the TNUEF. The memorandum was submitted to the District Collector by the team along with the 100 victims. 

Today also (21.08.2013) our comrades of Sivaganga unit led by Com Bharathidasan Secretary, ICEU, Sivaganga branch unit assisted villagers for submitting representations. The authorities have assured to arrange the shelter for homeless children in the Government hostels and also relief materials to the victims.  Our comrades are determined to make follow up on daily basis.

Congratulations to ICEU, Madurai division for their committment and role in fighting the social oppression.




Demolished houses at Pappankulam



News published by Theekathir daily was given below- 

சிவகங்கை, ஆக. 20-சிவகங்கை தாலுகா பாப்பான்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தலித் மக்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 22 வீடுகள் சுதந்திர தினத்தன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.பீமராவ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு.கந்தசாமி, ஆர்.கே.தண்டியப்பன், மானா மதுரை ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்து ராமலிங்கபூபதி, நகரச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீர பாண்டி, மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் வீரபாண்டி உள்ளிட்டோர் சந்தித்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட் டறிந்து இதன் மீது உரிய தலையீடு செய்வதாக உறுதியளித்தனர்.வீட்டை இழந்துள்ள மகாலிங்கம் கூறுகையில், எனது வீட்டிற்கு அரசு கொடுத்த வீட்டுமனைப்பட்டா உள்ளது. வீடு கட்டுவதற்கு அரசின் உத்தரவு உள்ளது. கட்டி முடித்த வீட்டில் இன்னும் குடி யேறவில்லை. கட்டிய வீட்டிற்கு இன்னும் அரசு ரூ.30 ஆயிரம் தரவேண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இடித்துவிட்டனர் என்றார்.கூலு என்பவர் கூறுகையில், அரசாங்க சர்வேயர் நில அளவை செய்தபோது, எங்களது பட்டா இடத்திற்குள் தான் வீடு கட்டப்பட்டுள்ளது எனக்கூறினார். ஆனால் வீட்டை இடித்துவிட்டனர் என்றார். பூபதி என்பவர் கூறுகையில், சாலைக் கென 20 அடி உள்ளது ஆனால் எனது வீடு ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி இடித்துவிட்டனர். தெருச்சாலை 20 அடி இருக்கும்போதே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எனது வீட்டை முழுமையாக இடித்துவிட்டனர். வீட்டை இடித்ததால் கோயிலில் தடுப்பு போட்டு குடியிருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

க.பீமராவ் எம்எல்ஏ : சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப் பினர் பீமராவ் கூறுகையில், “தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண் டும் என்ற நோக்கத்தோடு வருவாய்த் துறையும், காவல்துறையும், ஊராட்சி நிர்வாகமும் கூட்டாக செயல்பட்டு சட்ட விரோதமாக தலித் மக்களின் வீடுகளை இடித்திருக்கிறார்கள். பாப்பான்குளம் தலித் மக்கள் வீடுகளை இடித்தது தொடர் பாக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில், தலித் மக்கள் மீது நடை பெற்றுள்ள அக்கிரமத்திற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவோம் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக் கம் கூறுகையில், தலித் மக்களின் 22 குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக் கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. அரசு மானியத்தில் குழும வீடுகள் கட்டியிருந்த மகாலிங்கம், கூலு, வள்ளி, ராக்கு, சுப்பிரமணியன் ஆகியோரது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், பூமிநாதன், ராக்கு, முத்து, கருப்பையா, பிச்சை, முத்துச்சாமி, பூபதி, முருகன், பாலு ஆகியோரது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. சேது, சரவணன், தெய்வேந் திரன், தனுக்கோடி, துரைராஜ்செல்வி, ஆகியோர்களின் வீட்டு தாழ்வாரங்கள், கழிப்பறை இடிக்கப்பட்டுள்ளன.இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளை யும் அதே நிலையில் கட்டிக்கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்குள்ளான தலித் மக்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடித்த வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறையினர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

ஆட்சியருடன் சந்திப்பு : தொடர்ந்து ஆட்சியரைச் சந்தித்த இக்குழுவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இப்பிரச்சனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

குற்றவாளிகளை கைது செய்க: சிபிஎம்

தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன் றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத் தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராஜ். இப்பகுதி தலித் மக்கள் தங்களுக்கு வாக் களிக்கவில்லை எனக் கருதி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தனக்கு வாக் களிக்காத தலித் மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டு மென்கிற வன்மத்தோ டும், வெறியோடும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தங்கராஜ் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தலித் மக்களின் 28 வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் பட்டா, மின் இணைப்பு உள்பட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. மூன்று வீடுகள் இந்திரா ஆவாஸ் யோஜனா திட் டத்தில் கட்டப்பட்டவை. காவல்துறை அராஜகம்தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்படும் போது, மானா மதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை யினர் இருந்துள்ளனர். தட்டிக்கேட்ட கள்ளிவயல் கிராமத் தைச் சேர்ந்தசுந்தரபாண்டியனைக் காவல்துறையினர் தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் குரோதத்துடனும் சாதி வெறியோடும் கூடிய இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு தலித் மக்களின் சொத்துக்கள் அழிக் கப்பட்டுள்ளன.சுதந்திர தினத்தன்று சா திய வன்மத்துடன் தலித் மக் களின் வீடுகளை இடித்த தங்கராஜ், பாதுகாப்பு வழங்கிய துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை மற்றும் குற்றவா ளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக் கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவார ணமும், இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Tuesday, December 25, 2012

வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்

வெண்மணி சங்கமம் - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு-டிசம்பர் 25,2012- தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்- திருவாரூர்-சிறப்புரை-தோழர் டில்லிபாபு, எம்.எல்.ஏ, தோழர் ப.நீலவேந்தன், தலைமை- க.சுவாமிநாதன். தர்மபுரி நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் கிராமங்களில் இருந்து 10 பேர் பங்கேற்பு- ரூ 25000 தருமபுரி வழக்கு நிதி அளிப்பு - தருமபுரி இன்சூரன்ஸ் தோழர்களின் களப்பணிக்கு பாராட்டு- தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கைகள் பற்றிய பவர் பாயிண்ட் பிரசண்டேசன்-பாரதி புத்தகாலாயத்தின் இரண்டு நூல்கள் வெளியீடு- மொழிபெயர்ப்பாளர் தோழர் சி சுப்பாராவுக்கு பாராட்டு.

Tuesday, November 13, 2012

AIIEA units in Dharmapuri village : Rs 170000 worth relief to dalit victims



SZIEF condemns the cruel attacks perpetrated on the dalit houses in the 
Naikkenkottai village of Dharmapuri district of Tamilnadu which created
wide spread resentment among the democratic sections of the society.

The whole nation was shocked on hearing the news of violence unleashed by 
caste hindus on the dalits of three colonies in Naikkenkottai village of  Dharmapuri 
district on 7th Nov 2012.  Reason for violence is inter caste
marriage between Sri Ilavarasan dalit youth of that village and Smt Divya 
belonging to another backward caste. According to reports caste hindus numbering
more than 1500 entered dalit colonies and indulged in violence for more than
4 hours. Every house was attacked and looted. Belongings of dalits were burnt.
Virtually hundreds of families made homeless and lost every things required
for daily life. 

Our ICEU Salem unit took the initiative to visit the village on friday on 9th Nov 2012
and assessed the damages caused by the violence. The call was given by the 
South Zone Insurance Employees' Federation for the relief fund and all the 13 divisional
units have responded immediately. Our General insurance units also joined our effort.
Within 12 hours Rs 170000 has been mobilised and the relief materials including 
bedsheets, groceries have been arranged. On 10th Nov our comrades along with 
Tamilnadu Untouchability Eradication Front distributed relief materials affected 
dalit people there.

Com P Sampath President, Com K Samuelraj General Secretary TNUEF and CPI-M
MLAs Com K Balakrishnan, Delhi babu, Bhimrao participated in the meeting. Com
R Dharmalingam Vice president, SZIEF, Com A Kaliyaperumal President ,
Com R Narasimhan, General secretary, ICEU, Salem division and Com Madheswaran,
Chakravarthy (CRGIEA) distributed the relief materials.

TNUEF has given a call for protest demonstrations throughout the state on Nov 15th and 
AIIEA units also will participated in those programmes.

SZIEF congratulates ICEU Salem divisional unit, particularly Dharmapuri district comrades
for taking initiative to express our solidarity with dalit people against social oppression and 
thank all the divisional units of TN and Kerela for responding to the call for mobilisation of
funds.

AIIEA is the organisation which would be in forefront in fighting the social oppression and
upholding social justice by involving its membership in action. ICEU Salem and all the divisional
units of SZIEF have proved it again.

Our efforts to get justice for dalit victims continue in whatever form required.

Sunday, November 11, 2012

AIIEA units of TAMILNADU & KERALA in the villages of DHARMAPURI district- Rs 170000 worth relief to SC victims whose houses were ransacked by caste hindus

தருமபுரி : பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிவாரணம் - ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்- தீக்கதிர் , 11. 11. 2012
தருமபுரி, நவ.10-

தருமபுரியில் ஆதிக்க சாதியின ரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தலித் மக்கள் மீதான தாக்குதலில் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று பகுதிகள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகின. ஏரா ளமான வீடுகள் தீக்கிரையாகின. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட தலித் மக்க ளுக்கு அத்தியாவசியப் பொருட் களை வழங்க அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் முடிவு செய் தது. தமிழகத்தில் உள்ள சென்னை ஐ, சென்னை ஐஐ, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய எட்டு கோட் டங்கள் மற்றும் கேரளாவின் எர் ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய 5 கோட்டங்களை சேர்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழக(எல்.ஐ.சி) ஊழியர் கள் மற்றும் பொது இன்சூரன்ஸ் துறையின் சென்னை, கோவை மற் றும் மதுரை ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஊழியர்கள் இணைந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப் பிலான உதவி பொருட்களை வழங்கி யுள்ளனர்.

நவம்பர் 10 அன்று காலையில் நத்தம், அண்ணா நகர், கொண்டம் பட்டி ஆகிய மூன்று பகுதி மக்களை யும் சந்தித்து பாய், போர்வை மற்றும் மளிகைப் பொருட்களை இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் வழங்கினர். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் துணைத் தலைவர் ஆர். தர்மலிங்கம், சேலம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலை வர் ஏ.கலியபெருமாள், பொதுச் செய லாளர் ஆர். நரசிம்மன், துணைத் தலைவர்கள் ஜி.வெங்கடேசன், ஏ. குமரேசன், லட்சுமி சிதம்பரம், இணைச்செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் தருமபுரி கிளை சங்க நிர் வாகிகள் காரமல், அருண்குமார், மகேந்திரன், வேடியப்பன் ஆகியோர் பொருட்களை வழங்கினர். பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை மண்டல துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, பி.குரு சாமி, சேலம்-நாமக்கல் மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட தலைவர் பத்மநாபன் ஆகியோர் சென்றிருந்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், டில்லிபாபு, பீம் ராவ், மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற் றும் சிபிஎம் தருமபுரி மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இது முதல் கட்ட நிவாரணம் தான். அடுத்த வாரத்தில் அடுத்தகட்ட நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களோடு இன் சூரன்ஸ் ஊழியர்கள் இணைந்து நிற்பார்கள் என்றும் சங்க தலைவர் கள் குறிப்பிட்டனர்.

Sunday, September 23, 2012

தொழிற்சங்க இயக்கமும் ... சமுக நீதியும்...




க சுவாமிநாதன் 

ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களில் கூட இரண்டு குடிநீர்ப் பானைகள் இருந்திருக்கின்றன. தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எப்.எம்.குத்புதீன் கோபத்தோடு ஒரு பானையை உடைத்தார் என்று அவருக்கு அஞ்சலி செலுத்திய "தீக்கதிர்" கட்டுரையில் திரு ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார். சாதிய  வேறுபாடுகள் பணித் தலங்களில் எப்படி பரவி விரவி இருந்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. 1930 களில் "குடியரசு" இதழில் தந்தை பெரியார் சென்னை தங்க சாலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் ஒரு ஆதி திராவிடப் பெண் துணிச்சலாய் ஆலயப் பிரவேசம் செய்ததைப் பாராட்டியுள்ளார். சென்னை மாநகரத்தில் இப்படிப்பட்ட தீண்டாமைக் கொடுமைகள் கடந்த நூறாண்டுக்கு உள்ளே கூட இருந்துள்ளது. 

அண்மையில்  சேலம் அருகில் உள்ள சந்நியாசிக் குண்டு என்ற கிராமத்திற்கு தோழர் குழந்தைவேலு (செயலாளர்,சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி) தோழர் ஆர் நரசிம்மன் (பொதுச்  செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், சேலம் ) ஆகியோரோடு 16 08 2012 சென்று இருந்தேன். காலை 7 மணிக்கு கிராமக் கூட்டம் நடந்தது. தலித் மக்களின் குடியிருப்பில் இருந்து வெளியே செல்வதற்குள்ள எல்லாப் பாதைகளும் அடைக்கப்படுவதை கோபத்தோடும், குமுறலோடும் அம்மக்கள்  பகிர்ந்து கொண்டனர். ஒரு புறம் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் காம்பவுண்டு சுவர் கோட்டை மதில் போல எழுந்து நிற்கிறது. சுவரில் அணையின் மதகுகள் போன்ற  பெரிய ஓட்டைகள் மூலம் கழிவு நீர் மட்டும் தலித் பகுதியின் பக்கம் வெளியேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பாதையில் இப்போது வீடு கட்டும் ஒருவர் பாதையை மறிக்கும் சுவர் ஒன்றை எழுப்ப முயன்ற போதே த.நா.தீ.ஓ.மு தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியுள்ளது. நிலத்தை அளந்து பாதை இருப்பதை உறுதி செய்துள்ள அரசு நிர்வாகம் ஆனால் இதுவரை சாலை வசதி செய்து தரவில்லை. பாறைகளும், முட்புதருமாய் உள்ள தற்போதைய தற்காலிகப் பாதை, பாம்பு போல ஓரடி அகலத்தில் சுருண்டு சுருண்டு செல்கிறது. இருட்டிவிட்டால் பாம்புகளின் நடமாட்டமும் இருக்குமாம். பள்ளிக் கூடம் போகிற குழந்தைகளை பயந்து பயந்து அனுப்ப முடியுமா என்று ஒரு சகோதரி குமுறியபோது யாரிடமும் பதில் இல்லை. பணமும் பணமும் சேர்ந்துகொள்கிறது, சனமும் சனமும் ஏன் சேர மாட்டேன் என்கிறது என்று அதே பெண்மணி எழுப்பிய கேள்வி இந்தியச் சமுகத்தை தனது அனுபவத்தால் கூராய்வு செய்கிற கத்தியாய்ப் பாய்ந்தது. அக் கிராமத்தில் த.நா .தீ.ஓ.மு தலைமையில் போராட்டம் தொடர்கிறது. 

இதுதான் இந்தியச் சமுகத்தின் வித்தியாசமான ஒடுக்குமுறை. வர்க்க ஒடுக்குமுறைக்கான ஆயுதக் கிடங்கில் சாதியம் மிக மிகக்  கொடூரமான ஆயுதமாக இருக்கிறது. பொருளாதாரக் கோபுரத்தின் 
அடிக் கல் துவங்கி, பளபளக்கும் கலசம் வரை இதன் வெளிப்பாடுகளை நம்மால் காணமுடியும். சென்னை அரசு மருத்துவ மனையில் இறந்த குழந்தையின் கன்னத்தை ஒரு பெருச்சாளி குதறியதை செய்திகளில் படித்தோம். ஒரு சிறுவன் வாதாங் கொட்டை பார்ப்பதற்காக சுவர் ஏறியபோது ஒரு வெறி பிடித்த கனவானால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த கடந்தாண்டு செய்தி பலருக்கு மறந்து போயிருக்கலாம். அண்ணா பல்கலை கழகத்தில் ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாள். இம்மூன்று செய்திகள் தனித் தனியானதாக இருந்தாலும் ஒரு ஒற்றுமை தற்செயலானதல்ல.
இதில்  பலியான எல்லோரும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதே. வறுமை, உடல் நலக் கேடு, மன அழுத்தம் போன்ற எல்லாவற்றுக்குள்ளும் ஆராய்ந்து பார்த்தால் சாதியச் சமுகத்தின் தாக்கம் நிச்சயமாய் வெளிப்படும். பிசினஸ் வேர்ல்ட் இதழில் அண்மையில் வெளியான டாலர் பில்லியனர், ருபாய் பில்லியனர் பட்டியலில் தலித்துகளை பூதக் கண்ணாடி போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. 

இவ்வளவு   சாட்சியங்களும் சுட்டிக் காட்டுவது என்ன ? வர்க்க ஒடுக்குமுறைக்குள் சாதி ஒடுக்குமுறை சாரைப் பாம்புகளின் காதல் போல எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது! என்பதுதானே. எனவே சுரண்டலற்ற சமுகம் நோக்கிய பயணத்தில் இவ்விரு ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடி முன்னேற வேண்டியுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இத் தெளிவான புரிதலை நமக்கு தந்திருக்கிறது. அதனால்தான் இட ஒதுக்கீடு, சமுக நீதி, சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்றவற்றிற்கான களங்களில் சமரசமற்ற அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழகக் கோட்டங்களின் பங்களிப்பு  மகத்தானதாகும். 

இன்றைக்கு தீண்டாமைக் கள ஆய்வுகள் மிகப் பெரும் அம்பலப்படுத்தலாக (EXPOSE ) அமைந்து வருகின்றன. இதற்கான துவக்கபுள்ளியை வேலூர்க் கோட்டச் சங்கமே வைத்தது. வேலூர், விழுப்புரம்,கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்தி ஏராளமான கிராமங்களில் இருந்த சாதியப் பாரபட்சங்களை வெளிக் கொணர்ந்தது. அதற்குப் பின்னரே உத்தபுரத்தை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்த மதுரை மாவட்ட கள ஆய்வில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் முக்கிய பங்கை வகித்தனர். இன்றைக்கு தமிழகம் முழுக்க இன்சூரன்ஸ் ஊழியர்கள் முன் வரிசையில் நிற்கிறார்கள். குடியாத்தம் பகுதியில் பட்டா போராட்டத்தில் தோழர் குபேந்திரன் (பொது இன்சூரன்ஸ்- த.நா.தீ.ஒ.மு மாவட்ட தலைவர்) தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தி ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வெற்றி தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது. தஞ்சை அருகே சூரக் கோட்டை கிராமத்தில் சாதிமறுப்புத் திருமணத்திற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு எதிராக நடந்த போராட்டம் போன்ற இயக்கங்களிலும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்கேற்பு பாராட்டுதலுக்குரியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்முறைக்கு இலக்கான பழங்குடி மக்களுக்கு கிராமத்திற்கே சென்று நிவாரணம் அளித்தோம். வாச்சாத்தி மக்களோடு இணைந்து அம்பேத்கர் பிறந்த நாளைக்  கொண்டாடிய கோவை மண்டல பொது இன்சூரன்ஸ், சேலம் கோட்ட ஊழியர்கள் ரூ 150000   பெறுமான கல்வி உதவி பொருட்களை அக்கிராம பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அளித்துள்ளனர். இது போன்ற உதவிகள் , நிவாரணங்கள் எல்லாம் அனுதாபத்தில் செய்யப்படுபவை அல்ல. 19 ஆண்டுகள் பாலின வன்முறைக்கு எதிரான போராட்டத்தை  நடத்திய வாச்சாத்தி பெண்களின் வீரத்திற்கு விலை ஏதும் உண்டோ!  தமிழகம் முழுவதும் ஆயிரம் ஒடுக்கப்பட்ட இளைஞர்களோடு வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் அம்பேத்கர் மையம் ஏற்படுத்தியுள்ள உறவு விரிந்து கொண்டே வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கொண்ட கோட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூருக்கு அடுத்ததாக வேலூர் இணைந்துள்ளது. வேலூர், கடலூர் மையங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

பொருளியல்  , சமுக தளங்களில் நிலவுகிற பாரபட்சங்கள் தொடருமேயானால் அரசியல் சனநாயகம் தகர்ந்து போகுமென்ற டாக்டர் அம்பேத்கார் அவர்களின் எச்சரிக்கை மிக முக்கியமானது. அதுபோன்று இப்பிரச்சினைகளில் சரியான நிலைகளை மேற்கொள்ளாவிட்டால் தொழிற்சங்கங்களும் விரிந்த ஒற்றுமையை உறுதிப்படுத்த இயலாது. பொருளியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் சமுக ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிற உழைப்பாளிகளை உணர்வு பூர்வமாக இணைக்க இயலாது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அனுபவமும், செயல்பாடுகளும் இவற்றை நிரூபித்துள்ளன. 

இப்பாதையில்  நாம் எடுத்து வைத்துள்ள அடிகள் நீண்ட நெடிய பாதையின் ஒரு சில மைல்களே. இன்னும் எட்ட வேண்டிய இலக்கோடு ஒப்பிடுகையில்  நம்மோடு கோர்க்க வேண்டிய கரங்கள் நிறைய... செல்லவேண்டிய தூரமோ மிக மிக அதிகம்...

(வேலூர்க் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வெள்ளி விழா மலருக்காக )