Showing posts with label szief. Show all posts
Showing posts with label szief. Show all posts

Tuesday, January 27, 2015

AIIEA's Senior Leader Com R Govindarajan - 80th birthday on 25th Jan 2015

   

அன்புகெழுமிய ஆர்.ஜி அவர்களே!

80 வயது...
எண்ண முடிவது
ஆண்டுகளைத்தான்..

ஆர்.ஜி கடந்த தூரங்கள்

கால்பட்ட ஊர்கள்
பேசிய கூட்டங்கள்
வெளிப்பட்ட வார்த்தைகள்...
இவற்றையெல்லாம்
எப்படி எண்ணுவது?
இந்தியா முழுவதும் ஒலித்த குரல்..
பொருள் அல்ல வாழ்வின் இலக்கு
வாழ்வதில் பொருள் இருப்பதே சிறப்பு
யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..
இப்படி நகர்ந்த பயணம் அது!
தஞ்சையில் இருந்து சென்னைக்கு
அவரின் குடிபெயர்வு
ஈர்த்தது இயக்கமே.. இயக்கத்திற்காகவே...
உலகமயம் தேசியம் மதம் சாதி
எல்லாப் பொருளிலும்
இருளைக் கிழிக்கிற விளக்காய்
ஆர்.ஜியின் வகுப்புகள்
செதுக்கிய சொற்கள்
எண்ணற்ற தீபங்களை
ஏற்றிய சுடராய்
வாசிப்பின் அடையாளம்
மொழி ஆளுமைக்கு உதாரணம்
கம்பனில் துவங்கி
புதுக்கவிதைகள் தொடர்ந்து
காசு...துட்டு... மனி மனி... வரை
எடுத்துக் கையாளும் லாவகம்
பகிர்வதில் கிட்டும் பரவசம்
தொடர்கிறது அவரின் பயணங்கள்
இடதுசாரி பாதையில்..
ஆண்டுகளில் இல்லை வயது
அனுபவங்களின் திரட்சியில்
நூறைக் கடந்தவர்..
பொது வாழ்வுக்கான உறுதியில்
இன்னும் இருபது..
ஆர்.ஜி
உங்களின் விரல்கள் போதாது
பற்றி நடக்க பல பேர் இருப்பதால்..
இதுவே வாழ்வின் பொருள்
நீங்கள் ஈட்டிய செல்வம்

Friday, March 21, 2014

கோவில்களும் கோடாலிகளும்...



நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் களம் சூடு பிடித்துள்ள நேரம்மக்களின் வாழ்நிலைப் பிரச்சினைகள் இப்பிரச்சாரத்தில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதில் கார்பரேட் ஊடகங்களும்,மோடி-ராகுல் பிரச்சாரகர்களும் கவனமாக உள்ளனர்விலைவாசி- அந்நிய முதலீடு-பொதுத்துறை போன்ற முக்கியமான அம்சங்கள் மீது நுனிப்புல் விவாதங்களைக் கூட இவர்கள் நடத்துவதில்லை.

பொதுத்துறை மீது புதிய அரசு என்ன அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்பதில் இடதுசாரிகளைத் தவிர யாரும் திட்டவட்டமாக கருத்து கூறுவதில்லைஅப்படியே சிலர்சொன்னாலும் அதை நம்புவதற்கு அவர்களின் கடந்தகாலம் இடம் கொடுப்பதாக இல்லை. 

தேர்தல் துவங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டதுசிதம்பரம்வாசன் போன்றவர்கள் தேர்தலில் தமிழகத்தில் நிற்கவே தயங்குகிறார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றனமாற்றம் நிச்சயம்... மாற்றும் அவசியம் எனும்போது பொருளியல் பாதை பற்றிய விவாதம் தேவைப்படுகிறது.

பொதுத்துறையின் வரலாறு

1954, ஜூலை 7- சட்லெஜ் நதியின் குறுக்கே இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ரா -நங்கலின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்அவ்விழாவில் அன்றைய இந்தியப்பிரதமர் ஜவகர்லால் நேரு அந்த அணையை நவ இந்தியாவின் நவீனத் திருக்கோவில்கள் என்று வர்ணித்தார். இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள்தேச கட்டுமானத்திற்கு அரசின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு அவர் வைத்த பெயர் அது. 

ஏன் பொதுத்துறை உருவாக்கப்பட்டதுஇந்திய ஆட்சியாளர்கள் விரும்பி உருவாக்கினார்களாசுதந்த இந்தியாவின் சுயசார்பான வளர்ச்சிக்கு ஏன் அவை அவசியமாயின?இப்படிஇந்தியாவில் பொதுத்துறை வாயிலாக வளர்ச்சியை திட்டமிடுவதற்கு முன்பாக அமெரிக்காவின்பிரிட்டனின் கதவுகளைத் தட்டியபோது அவை திறந்தனவாஎன்பதெல்லாம் தனிக்கதைமேலை நாடுகள் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இல்லைஇந்தியத் தொழிலதிபர்களின் கைகளிலும் பெரிய கனரகத் தொழில்களை உருவாக்குகிற நிதிபலம் இல்லைசுதந்திர எழுச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்ததுகம்யுனிஸ்டுகளின் தொடர்ந்த போராட்டங்கள்கருத்துருவாக்கம் ஆகியவற்றையும்ஆளும் வர்க்கங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்ததுஇப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே "சிசேரியன்" பிரசவம் போல பொதுத்துறை பிறந்தது. ஆனால் பொதுத்துறை உருவாக்கம் இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மகத்தானது.

1948 ல் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் (I.T.I ) சுதந்தரத்திற்குப் பிந்தைய முதல் பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டதுமுதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் பொதுத்துறைநிறுவனங்களே இருந்தனஆனால் இன்று 404 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களும்,1062 மாநில அரசு நிறுவனங்களும் உள்ளனராஞ்சிபிலாய்,துர்காபூர்ரூர்கேலா போன்றநகரங்களே கூட பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியால் உருவாயினதமிழகத்தின் நெய்வேலி போன்று நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1956 ல் மிகப் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வந்த 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு எல்..சி உருவாக்கப்பட்டதுஅதற்குப்  பின்னரே இன்சூரன்ஸ் பயன்கள் சேரிகளுக்கும்கிராமங்களுக்கும்அடித்தள உழைப்பாளிகளுக்கும் தேடித் தேடிப்  போய்ச் சேர்ந்தன. 1969 ல் வங்கிகள் தேசியமயமான பின்னர் கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள்திறக்கப்பட்டன. திவால்கள் பழங்கதை ஆகிப் போயின. 

மிகப்பெரிய நம்பர் ஒன் உருக்கு நிறுவனமான "ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா" (SAIL), இந்தியாவில்  அதிக லாபம் ஈட்டுகிற முதன்மை நிறுவனமான  "எண்ணெய் மற்றும் இயற்கை வாயுஆணையம்" (ONGC) மிகப்பெரும் வணிக நிறுவனமாய் திகழும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC) போன்ற பெருமைமிக்க நிறுவனங்கள் எல்லாம் பொதுத்துறை நிறுவனங்களே!

ஆனால் சுயசார்புச் சக்கரம் 1991 முதல் பின்னோக்கிச் சுழலத் துவங்கியதுநவீனத் திருக்கோவில்கள் என்று நேருவால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடும் தாக்குதலுக்குஆளாகின. கோவில்களில் பிரசாதம் கிடைக்கும்ஆனால் கோவில்களே பிரசாதமாக மாற்றப்பட்டன. ஆம்.பொதுத்துறை நிறுவனங்கள் பன்னாட்டு மூலதனத்திற்கும்இந்தியப் பெரும்தொழிலகங்களுக்கும் படையலாக பரிமாறப்பட்டன.


விதம் விதமா விற்பனை 

1991 லிருந்து பொதுத்துறை பங்கு விற்பனைக்கு விதம் விதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டனகேந்திர விற்பனைதனியாருக்கு பெரும்பான்மை பங்குகள்பெரும்பான்மை பங்குகளை அரசின் கைகளில் வைத்து கொண்டு மீதத்தை விற்பதுகட்டுப்பாடுகளுடன் பங்கு விற்பனை... இப்படி அரசின் பலத்திற்கேற்பஎதிர்ப்பின் அளவுக்கேற்ப சாதுர்யமாக,லாவகமாக கொள்கைகள் வகுக்கப் பட்டன. கேந்திர விற்பனை என்றால் ஒரே அடியில் தனியாருக்கு கை மாற்றுவது ஆகும். இப்படி வி.எஸ்.என்.எல் நிறுவனம் டாட்டாவுக்கு கைமாறியதுமாடர்ன் புட்ஸ்சென்டார் ஓட்டல்பால்கோ எனப் பட்டியல் நீளும்இது . கேந்திர விற்பனை என்பது சயனைடு குப்பி மூலம் இன்ஸ்டன்ட் ஆகக் கொல்வது போன்றது. மற்றவகை பங்கு விற்பனைகள் எல்லாம் மூட்டைப் பூச்சி மருந்துமூலம் கொஞ்சம் மெல்ல மெல்ல உயிர் பறிக்கப்படுவது போன்றது. 

1991 லிருந்து 2013 வரை ரூ 136930 கோடி பெறுமான பங்குகள் விற்கப்பட்டன2000-2004 வரை ரூ 23034 கோடி, 2004-2008 வரை ரூ 8516 கோடி, 2009-2013 வரை 84208 கோடிஎந்தந்த ஆண்டுகளில் எவ்வளவு பங்கு விற்கப்பட்டது என்பதை உன்னிப்பாக பார்த்தால் பேரன்களின் திருவிளையாடல்களும்கடப்பாரைகளின் நர்த்தனமும் தெரிய வரும். யார் பொதுத்துறை பாதுகாப்பில் உறுதியாக இருந்தார்கள் என்பதும் தெளிவாகும். 

நரசிம்மராவ் ஆட்சியே தனியார்மயத்திற்கு கதவுகள் திறக்கப்பட்ட காலம்1992-93 ல் 20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டனநஷ்டம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது அப்போதே அம்பலமாகிப் போனது1992-98 க்கு இடைப்பட்ட ஆண்டு காலத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் 21 சதவீதம். இதே காலத்தில் தனியார்நிறுவனங்களின் லாபம் 15 சதவீதமே ஆகும்மாருதி சுசுகி அன்னியர் கைகளுக்கே போனதும் இக்காலமே.

2000-2004 ஆண்டுகள் பி.ஜே.பியின் ஆட்சியில் இந்தியா 'ஒளிர்ந்தகாலம்அப்போதுதான் வி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் .டி.டி.சியின் 18 ஓட்டல்கள் கேந்திரவிற்பனை  மூலம் தனியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டதுபொதுத்துறையை விற்பதற்கென்று தனி அமைச்சரை நியமித்த பெருமையும் பி.ஜே.பி க்கு உண்டு. அமைச்சர் அருண் சௌரி பங்குவிற்பனை இலாக்காவின் முதல் அமைச்சராகவும்கடைசி அமைச்சராகவும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கடைசி அமைச்சராகவும் மாறியதற்கு காரணம்கேந்திர விற்பனையில் மக்களின் பணம் பாழாகி விட்டதென்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெடித்ததே ஆகும்.

ஜனவரி, 2002ல் மும்பை உள்நாட்டு விமான முனையம் அருகில் இருந்த 288 அறைகளைக் கொண்ட சென்ட்டார் ஓட்டலை ரூ 83 கோடிகளுக்கு பி.ஜே.பி அரசு விட்டதுஅதை வாங்கிய பத்ரா ஹாஸ்பிடாலிடி தொழிலே நடத்தாமல் "சூடா ஒரு ஸ்பெசல் தோசை " மாதிரி நான்கே மாதங்களில் ரூ 115 கோடிகளுக்கு சகாரா நிறுவனத்திற்கு ஓட்டலை விற்று விட்டதுரூ 5000 கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கொண்ட பால்கோ நிறுவனத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரூ551 கோடிகளுக்கு விற்றதுஇந்த பால்கோ நிறுவனம் "அக்னி" "பிருத்விஏவுகணைகளை தயாரிக்க உதவிய அலுமினிய நிறுவனம்இன்று ஜவானும் பாதுகாப்பாக இல்லைகிசானும்பாதுகாப்பாக இல்லை என்று வசனம் பேசுகிற மோடியின் பி.ஜே.பி மத்தியில் ஆட்சி செய்த காலத்தில்தான் ஏவுகணைகளைத் தயாரிக்க உதவிய பால்கோ நிறுவனப் பங்குகள் சூறை விடப்பட்டுள்ளனகிசான்கள் தூக்குகயிறுகளை தேடிய காலமும் அதுவே என்பதும் உண்மை. 

அருண்சோரியோ  பொதுத்துறை பற்றி எவ்வளவு மோசமாக பேசினார் தெரியுமா!  "பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்தினங்கள் அல்லஅவை ரத்தம் ஒழுகிற குடல் புண்கள்". ஆனால்உண்மையில் பொதுத்துறையின் ரத்தமே குடிக்கப்பட்டது.

2004-2008 காலத்தில்தான் மிகக் குறைவாக பங்கு விற்பனை (ரூ 8516 கோடி)நடந்தேறியுள்ளதுகாரணம்இடதுசாரிகள் ஆதரவோடுதான் மத்தியில் ஆட்சி அமைய வேண்டியிருந்தது62 இடதுசாரி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கோவர்த்தன மலை போன்று பொதுத்துறைக்கு குடை பிடித்தனர்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு -ஆட்சி வெளியிட்ட தேசிய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் (NCMP) நவரத்தினங்கள் பாதுகாக்கப்படும்லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டதுஇடதுசாரிகள் ஆட்சியில் பங்கேற்காமல் மக்களுக்கான போராட்ட ஆயுதமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்கள். பொதுத்துறை வங்கிகளின் அரசுப் பங்குகளுக்கான குறைந்த பட்சவரம்பை 51 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைக்கிற மசோதாவைக் கைவிடச் செய்தார்கள். இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவதை தடுத்து நிறுத்தினார்கள். 

2008 உலக நிதி நெருக்கடியில் மேலை நாடுகளில் பன்னாட்டு வங்கிகளும்இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தலை குப்புற கவிழ்ந்தனஆனால் இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ்நிறுவனங்களும் - வங்கிகளும் அப்புயலில் நிலை குலையாது நிமிர்ந்து கம்பீரமாக நின்றனராகுல் காந்தியோ " எனது பாட்டி இந்திராவும்கொள்ளுதாத்தா நேருவும் வங்கிகளை,இன்சுரன்சை தேசியமயமாக்கியதுதான் இந்திய நிதித்துறை காப்பாற்றப் பட்டதற்கு காரணம்" என்று மார்தட்டிக் கொண்டார்நெஞ்சு குறுகுறுக்காமல் பேசுவதை எப்படி கற்றுக்கொண்டார்களோ!

அறுந்து போன கடிவாளம் 

2009-2013 ல் கடிவாளம் அறுந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு II  ரூ 84208 கோடி பங்குகளை விற்றுள்ளதுஇது 23 ஆண்டுகளில் நடந்துள்ள பங்கு விற்பனையில் 61 சதவீதம் ஆகும்.என்.டி.பி.சிசெயில்ஆயில் இந்தியாஎச்..எல்நால்கோ..சிஎம்.எம்.டி.சி என பல நிறுவனங்கள் சந்தைக்கு வந்தன

பங்கு விற்பனை மூலமாக மட்டுமின்றி  வங்கித்துறையில்டாட்டாஅம்பானிபிர்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் நுழைய வழி வகுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் கைகளாலேயே திறக்கப்பட்ட குளோபல் டிரஸ்ட் பேங்க் கவிழ்ந்ததை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தைரியம்தான்உலக பெரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவால் ஆகியுள்ள நிலையில் இந்திய இன்சூரன்ஸ் துறையில்அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் முயற்சி செய்தார்கள்.

பி.பி.பி என்றழைக்கப்படுகிற அரசு-தனியார் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்க்ப்பட்டனடெல்லியில் அப்போலோ மருத்துவ மனையோடு இணைந்து டெல்லி அரசு உருவாக்கிய இந்திரபிரஸ்தா மருத்துவ மனைக்கு நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்திலேயே உள்ள 15 ஏக்கர் நிலம் ஓராண்டுக்கு ரூ க்கு லீசுக்கு தரப்பட்டதுடெல்லி அரசு ரூ 16 கோடியை மருத்துவ மனை கட்டுமானத்திற்கு அளித்தது33 சதவீத படுக்கைகள், 40 சதவீத வெளிநோயாளிகளுக்கு இலவச மருத்துவம் என ஒப்பந்தம் போடப்பட்டது200 படுக்கைகள் இலவச சிகிச்சைக்காக ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும்ஆனால் 1997 லிருந்து 2009 வரை ஒரு ஏழை கூட ஒப்பந்த அடிப்படையில் இலவச மருத்துவப் பயனை அனுபவிக்கவில்லைஇதுதான்பி.பி.பி யின் லட்சணத்திற்கு உதாரணம்.

மக்களின் பணம் தனியாருக்கு சூறையாடப் பட்டதற்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக் கடன்கள் ஓர் உதாரணம். மார்ச்,2013 ல் உள்ள மொத்த வராக் கடன் ரூ 1,64,461 கோடிகள்நான்கே நான்கு பெரும் தொழிலகங்கள் மட்டும் வைத்துள்ள பாக்கி ரூ 22,666 கோடி2007-2013 காலத்தில் வஜா செய்யப்பட்ட வராக்கடன் ரூ 1,41,000 கோடிகள். முதல் 30 வராக்கடன் கணக்குகளை ஒவ்வோர் வங்கிகளில் நேர் செய்தாலே பாலன்ஸ் ஷீட்டுகள் எல்லாம் நிமிர்ந்துவிடும் என்று சொல்வது யார் தெரியுமா! நம்ம சீமான் சிதம்பரம்அவர்கள்தான்.

நிலக்கரி ஸ்பெக்ட்ரம்சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் காங்கிரஸ்பி.ஜே.பிகாங்கிரஸ் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்லமுறையான நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் 155 நிலக்கரி படுகைகள்  காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 186000 கோடி இழப்பு ஏற்பட்டது என்றால் பி.ஜே.பி காலத்திலும் 32 படுகைகள் இப்படித்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டனராஜா ஸ்பெக்ட்ரத்தை 2001 விலைகளிலேயே 2005,2007,2008 ஆண்டுகளிலும் ஒதுக்கினார் என்பதே குற்றச்சாட்டுபி.ஜே.பி யும் 2001 விலைகளிலேயே 2003 ல் ஸ்பெக்ட்ரத்தை விற்று ஊழலுக்கு "பிள்ளையார் சுழி" போட்டது. 

மாற்று என்ன !

சுதந்திர இந்தியாவில் இன்றுவரை யார் பொதுத்துறைக்கு பாதுகாவலாக இருந்துள்ளார்கள் என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றனபொதுத்துறை பற்றி மிகத் தெளிவானஅணுகுமுறையையும் இடதுசாரிகள் வைத்துள்ளார்கள். சீமென்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்  தோழர் பி .ராமமூர்த்தி 80 களில் நடத்திய போராட்டம் பெல் நிறுவனத்தை பாதுகாத்தது. எல்.ஐ.சியை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதாவை கைவிடுகிற கடிதத்தை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி சி.பி.எம் கட்சியின் பின்னாளைய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுனில் மைத்ரா கரங்களில் தரவேண்டியிருந்தது. இவ்வாறு வரலாறு நெடுகிலும் இடது சாரிகளின் அரும்பணி பொதுத்துறையை பாதுகாத்ததற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. 

நவரத்தினங்களை விற்காதேலாபமாக இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்காதேநட்டத்தில் ஓடினாலும் சமுக நோக்கில் இயங்குவதாக இருந்தால் அவற்றையும் விற்காதே;நட்டத்திலும் ஓடிசமுக நோக்குடையதாகவும்  இல்லாதுமீட்சிக்கும் வழியில்லாவிட்டால்தொழிலாளருக்கு உரிய இழப்பீடோடு பங்குவிற்பனைக்கு போகலாம் என்பதே இடதுசாரிகள்முன்வைக்கிற மாற்றுஇதைவிட தெளிவான அணுகுமுறை வேறு என்ன இருக்க முடியும்!

கேரளாவில் 2006-2011 வரை இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த காலத்தில் 32 மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இருந்து மீட்கப்பட்டனஅந்நிறுவனங்கள்ரூ 232 கோடி லாபம் ஈட்டின. 9 புதிய அரசு நிறுவனங்கள் துவக்கப்பட்டனஇப்படி சொல்லும் செயலும் ஒன்றாய் செயல்படுபவர்கள் இடதுசாரிகளே என்பதை காலம் உணர்த்தியுள்ளது.

இந்திய அரசியலில் ஒருமுறை கூட பதவிக்காகவோகார்ப்பரேட்டுகள் வீசுகிற தூண்டிலிலோ சிக்காமல் பொதுத்துறை காக்க உறுதியாக இருந்தவர்கள் இடதுசாரிகள்நாடாளுமன்றத்தில்ஒருமுறை கூட மக்களுக்கு எதிராக எந்த மசோதாவுக்காகவும் கை தூக்காதவர்கள். இடதுசாரிகளின் பலம் நாடாளுமன்றத்தில் பெருகுவதும் அவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கவேண்டிய அவசியத்தோடு ஒரு புதிய அரசு உருவாவதுமே பொதுத் துறையை, மக்கள் நலனை பாதுகாக்க உதவும். இதுவே வரலாற்றின் செய்தி. எனவே எது மாற்று என்றும்யார் மாற்று என்பதும் தேர்தல் களத்தில் மக்கள் மத்தியில் சொல்லப்படவேண்டும்.