இன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். திருநெல்வேலி, மதுரை, சேலம் கோட்டங்களில் மாலை நேர கருத்தரங்கங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை - 2 கோட்டத்தில் பாம்பே மீச்சுவல் கட்டிடத்தில் சிறப்பு வாயிற் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. திருநெல்வேலியில் தோழர் கே சாமுவேல் ராஜ் ( தீண்டாமை ஒழிப்பு முன்னணி ) சேலத்தில் தோழர் ) கே கணேசன் ( கோவை அம்பேத்கர் கல்வி மையம்) மதுரையில் தோழர் ச. தமிழ்ச்செல்வன் ( த மு எ க ச ) சென்னை 2 ல் தோழர் கே சுவாமிநாதன் (SZIEF ) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கங்களில் மூன்று மையங்களிலுமே 125 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் கடுமையான மழைக்கு மத்தியிலும் 75 பேர் பங்கேற்றனர்.
அம்பேத்கர் திரைப்படம் தடைகளை மீறி வெளி வந்திருப்பதும், அதற்கு திரைப்பட உலகின் முற்போக்காளர்களும், த மு எ க ச , தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் எடுத்த முயற்சிகள் அனைவரும் அறிந்ததே. சேலத்தில் 4 காட்சிகள் முழுமையாக நமது சங்கத்தால் முன் பதிவு செய்யப்பட்டு ஓர் இயக்கமாகவே அதிகாரிகள் , ஊழியர்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சென்னையில் இப் படம் வெளியிடப்பட்ட டிச 3 அன்று எக்மோரில் இருந்து ஆல்பர்ட் தியேட்டர் வரை இசையோடு பேரணி நடந்தேறியது. நமது சங்கத்தின் சென்னை 1 , சென்னை 2 கோட்டங்கள் , பொது இன்சூரன்ஸ், BSNLEU , BEFI ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆல்பர்ட் தியேட்டரில் டிச 12 அன்று காலைக்காட்சிக்கு 400 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் அலங்கார் தியேட்டரில் டிச 7 அன்று நமது சங்கத்தின் சார்பில் சிறப்புக் காட்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு கூட்டத்தில் - டிச 4 , சென்னை- நமது தோழர்கள் த செந்தில்குமார், பி கவிமணி ஆகியோர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் இம் முன்னணி சார்பில் " வெண்மணி " என்ற பெயரில் ஓர் காலாண்டு இதழைக் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் குழுவில் தோழர் க சுவாமிநாதன் இணைக்கப்பட்டுள்ளார்.
வேலூர், கோவை, சென்னை 1 கோட்டங்களிலும் அம்பேத்கர் நினைவு நாள் சமுக நீதி பாதுகாப்பு நாளாக கருத்தரங்கங்கள், சிறப்பு வாயிற் கூட்டமாக நடந்தேறவுள்ளன.
No comments:
Post a Comment