போராட்டம்! போராட்டம்!
உத்தப்புரம் தலித் மக்களின்
உரிமை காக்கும் போராட்டம்!
தலைநகர் சென்னையிலே
தார்ணா போராட்டம் !
தலித் மக்களின் உரிமைக்கான
நீதி கேட்டு போராட்டம் !
தமிழக அரசே! தமிழக அரசே!
உறுதிப்படுத்து!உறுதிப்படுத்து!
உத்தப்புரம் தலித் மக்களின்
அரச மர வழிபாட்டை
உறுதிப்படுத்து! உறுதிப்படுத்து!
நடவடிக்கை எடு!நடவடிக்கை எடு!
தலித் உரிமைகளை மறுக்கின்ற
சாதி ஆதிக்க சக்திகள் மீது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
அநியாயம் ! அநியாயம் !
உத்தபுரத்தில் அநியாயம் !
அரச மர வழிபாட்டை
இருபது ஆண்டுகளாய்
தடுக்கின்ற அநியாயம்!
முத்தாலம்மன் கோவிலின்
சுற்றடைப்பிற்குள்ளாக
நுழைய விடாமல் தடுக்கின்ற
அநியாயம்!அநியாயம்!
அனுமதியோம்!அனுமதியோம்!
வைக்கம் வீரர் பெரியார்
இயக்கம் வளர்த்த தமிழ் மண்ணில்
அரச மரத்தைச் சுற்றி வர
அனுமதி மறுப்பு!அனுமதி மறுப்பு!
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!
தலையிடு!தலையிடு !
தமிழக அரசே தலையிடு!
பெரியாரின் வாரிசுகள் என்று
பீத்திக் கொள்ளும் தமிழக அரசே
யார் பக்கம் ! யார் பக்கம்!
சாதியின் பக்கமா!நீதியின் பக்கமா!
பதில் சொல்லு!பதில் சொல்லு!
கூடாதா!கூடாதா!
தலித்துகளுக்கு நிழல் கூடக்
கூடாதா கூடாதா!
மறுப்பது ஏன்! மறுப்பது ஏன்!
பேருந்து நிழற்குடை வேண்டுமென்ற
சாதாரணக் கோரிக்கை
மறுக்கப்படுவது எதற்காக!
அடி பணியாதே ! அடிபணியாதே!
சாதி ஆதிக்க சக்திகளுக்கு
அடி பணியாதே! அடி பணியாதே!
துணை போகாதே!துணை போகாதே!
தீண்டாமைக் கொடுமைகளுக்குத்
துணை போகாதே!துணை போகாதே!
தமிழக அரசே!தமிழக அரசே!
விட மாட்டோம் விடமாட்டோம் !
தலித் மக்களின் உரிமைகளை
காலில் போட்டு மிதிப்பதற்கு
விடமாட்டோம் விடமாட்டோம்!
பணிய மாட்டோம் பணிய மாட்டோம் !
உத்தப்புரம் மக்களின்
உரிமைக்கான போராட்டத்தில்
அடக்குமுறை ஆனவங்களுக்கு
பணிய மாட்டோம் பணிய மாட்டோம் !
எத்தனை எத்தனை அடக்குமுறை !
எத்தனை எத்தனை வழக்குகள் !
எத்தனை நாள் சிறை வாசம்!
தமிழக அரசே தமிழக அரசே
சாதிய வெறியர்களுக்கு பச்சைக் கொடி!
உரிமை கேட்டு போராடும்
உத்தப்புரம் தலித்துகளுக்கு
தடியடி! தடியடி!
அவமானம் அவமானம்
தந்தை பெரியார் இயக்கம் வளர்த்த
தமிழ் மண்ணுக்கு அவமானம்!
தமிழ் மண்ணுக்கு அவமானம்!
அம்பேத்காரின் வாரிசுகளாய்
சீனிவாச ராவ் வாரிசுகளாய்
போராட்ட களம் காண்கிறோம்.
ஓய மாட்டோம்!ஓய மாட்டோம்!
தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில்
ஓய மாட்டோம் ஓய மாட்டோம்!
உத்தபுரத்தின் தீண்டாமையை
ஒழிக்கும்வரை ஓய மாட்டோம்!
ஒன்றுபட்ட போராட்டம்!
வென்று காட்டும் நிச்சயம் !
No comments:
Post a Comment