Saturday, December 25, 2010

பெண்- தலித்-நிறுவன உலகம்


-க.சுவாமிநாதன்

6 மாதத்திற்கு முன்பு பாரிஸ் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் இது. வியோ லியா என்விரோன்மென்ட் என்ற பிரான்ஸ் தண்ணீர் நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் ஓர் தாடிக்கார கூட்டம், நிறுவனத் தலைவரின் இருக் கைக்கு முன்பு போய் அட்டகாசம் செய் தது. கைகள் ஆவேசமாக அசைந்தன. குரல்கள் ஓங்கி ஒலித்தன. அந்தத் தாடிக்காரர்கள் யார் தெரியுமா?

அத்தைக்கு மீசை முளைத்த கதை தான்! பெண்கள்தான் தாடி வைத்துக் கொண்டு கலகம் செய்தார்கள். அந்நிறுவ னத்தின் இயக்குனர் அவையில் பெண்க ளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கேட்டே இந்த போராட்டம். 17 இயக்குனர்களில் ஒரே ஓர் பெண்தானாம். நியூயார்க்கைச் சேர்ந்த “ கவர்ன்னன்ஸ் மெட்ரிக் இன்டர் நேஷனல்” (GOVERNANCE MATRIC INTERNATIONAL) என்ற ஆய்வு நிறுவனத் தின் கணக்குப்படி பெண்களின் பிரதி நிதித்துவம் இதோ. (அடைப்புக் குறிக் குள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிறுவ னங்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது)

பிரான்ஸ் - 9 .5 % (103 நிறுவனங்கள்)

பிரிட்டன் - 8.5 % (405 நிறுவனங்கள்)

அமெரிக்கா -12.2%

(1754 நிறுவனங்கள்)

பிரான்சில் இயக்குனர் அவையில் 40 % பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா விவாதத்தில் உள்ளது. இது போன்ற ஒதுக்கீடு ஏற்கனவே நார்வே நாட்டில் எட்டு ஆண்டுகளாக உள்ளது. நார்வேயில் 2002 ல் 6 .8 % ஆக இருந்த பெண் பிரதிநிதித்துவம் தற்போது 34% ஆக (23 நிறுவனங்களில்) உயர்ந்துள்ளன.

அதிர்ஷ்டம் 500 ( FORTUNE 500) நிறுவனங்களில் உயர்மட்ட பதவிகளில் உள்ள பெண்கள் 3ரூ மட்டுமே.

பாலின பாரபட்சம் எவ்வளவு நிறு வன உலகத்திற்குள் ஊடுருவி இருக் கிறது பார்த்தீர்களா?

* * * * *

பிக்கி (FICCI) என்பது இந்தியத் தொழில் மற்றும் வணிகக் கூட்டமைப்பு ஆகும். “டிக்கி” (DICCI) என்ற அமைப்பு 2005ல் உருவாகி உள்ளது. தலித் இந்தி யத் தொழில் மற்றும் வணிகக் கூட்டமைப்பு என்பதே அது.இதில் ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை ஆண்டு விற்பனை வரை உள்ள 400 நிறுவனங் கள் உறுப்பினர்களாக உள்ளன.

2010ல் பூனாவில் தலித் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட தொழில் கண்காட்சி ஒன்றை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. மகாராஷ்டிராவை மைய மாகக் கொண்ட இவ்வமைப்பு குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகாவிலும் இத்தகைய ஒருங்கிணைப்பைச் செய்யப் போகிறார்களாம்.

2008ல் இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைமை நிர்வாகி நந்தன் நீல் கனி ஓர் ஆய்வரங்கில் பேசும்போது “தொழிலதிபராக வளர்ந்துள்ள ஒரு தலித்தைக் கூட பார்க்க இயலவில்லை” என்று குறிப்பிட்டார்.( டைம்ஸ் ஆப் இந் தியா - 29 . 5 . 2010 ) டாட்டா, அம்பானி யோடு ஒப்பிடுகிற அளவில் ஒருவருமே இல்லை என்பது உண்மைதான். ஆண்டிற்கு ரூ.300 கோடி விற்பனையைத் தொட்டி ருக்கிற “காமணி ட்யூப்ஸ்” (KAMANI TUBES) நிறுவனத்தின் கல்பனா சரோஜ் போன்றோர் அரிதான விதிவிலக்குகளே ஆவர்.

2010 - மார்ச் மாதம் நடத்தப்பட்ட “தொழிலில் தலித்துகள்- வடக்கு, மேற்கு இந்தியாவில் தொழில் முனையும் பட்டியலினச் சாதியினர்” குறித்த ஆய் வில் 42 சதவீதமானவர்கள் சாதியப் பாரபட்சங்களுக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். சொந்த வாழ்க்கை யில் பாரபட்சங்களுக்கு ஆளானதாக 63 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவின் 25 கோடி தலித் மக்கள் தொகை என்பது ஜி8 குழுமத்தில் உள்ள நான்கு ஐரோப்பிய நாடுகளின் - பிரான்ஸ், பிரிட்டன்,ஜெர்மனி, இத்தாலி - மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஆனால் இவர்களில் ஒரு பில்லியனர் கூட கிடையாது. இந்தியத் தொழில் கூட்டமைப்பில் (CII) ஒருவர் கூட உறுப்பினர் இல்லை. தில்லியின் கன்னாட் பிளேசில் ஒரு காட்சி அறை கொண்டவர் கூட இல்லை” (www.ambedkar.org)

நிறுவன உலகம் பாலின பாரபட்சத்தைப் போன்றே சாதியப் பாரபட்சத்திற் கும் விதிவிலக்கு அல்ல.

******

கொசுறு தகவல்கள்

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினப்படியை முடக்கப்பட்ட நாட்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் வாங்காததால் ரூ.75 லட்சம் மிச்சமாம். ஜேபிசியை அமைத்திருந்தால் நாடாளுமன்றம் நன்றாக நடந்திருக்குமே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இழப்பு ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். ரூ.75 லட்சம் மிச்சம் என்பது, ஸ்பெக்ட்ரம் இழப்பில் ஒரு சிறு துளி கூட கிடையாது. இப்படிக் கழித்தால் கூட லட்சம் ஜென்மம் எடுக்க வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு தினப்படி எல்லாம் கிடையாது. அவர்களுக்கெல்லாம் ஜென்மப்படிதான் என்று சொல்லிக் கண்ணடித்தார் ஒரு பத்திரிகையாளர்..

* ரிசர்வ் வங்கி சுற்றுக்கு விட்ட வங்கி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத் தாள் மீது கருத்து தெரிவித்துள்ள தற்போதைய வங்கிகள், பெரும் தொழிலகங் களை வங்கித் தொழிலில் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளன. இந்தியாவின் கடந்த கால, அண்மைய உலக அனுபவங்களின் அடிப்படை யில் அரசின் முன்மொழிவு சரியல்ல என்று அவை கூறியுள்ளன.

* மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தின் மேலே

பண வீக்கம் டிசம்பர் இரண் டாவது வார புள்ளிவிவரங்களின்படி இரட்டை இலக்கத்தை (12 . 13 சதவீதம்) தொட்டுவிட்டதாம். வெங்காய விலைதான் காரணம் என்று விளக்கமளித்து உள்ளார் பிரணாப் முகர்ஜி. அதைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

* இன்றையச் செய்தி
வெங்காய விலை சற்று குறைந்துள்ளது.
தக்காளிக்கு கோபம் வந்து அது எகிறிக் குதிக்க ஆரம்பித்துவிட்டது.

No comments:

Post a Comment