புது டெல்லியில் நவம்பர் 20 முதல் 24 வரை நடைபெற்ற
AIIEA வின் வைர விழா ஆண்டு 22 வது மாநாடு எழுச்சியாக
அமைந்திருந்தது.
மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள் இம்மாநாட்டை வெற்றி மாநாடு
( CONFERENCE OF VICTORY ) என்று வர்ணித்தனர். ஊதிய உயர்வுக்
கோரிக்கையில் எட்டப்பட்ட மாபெரும் வெற்றியின் பின்னணியில்
அவ் வர்ணனை பொருத்தமானது.
இன்னும் சிலர் நம்பிக்கை மாநாடு
( CONFERENCE OF CONFIDENCE ) என்றார்கள். 16 ஆண்டுகளாக
உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி எல் ஐ சி யின்
பொதுத்துறைத் தன்மையை பாதுகாத்திருப்பதாலும், தனியார்
போட்டிக்கு எதிராக 73 % சந்தைப் பங்கை எல் ஐ சி தக்க
வைத்திருப்பதாலும் அப்படி அழைத்ததும் பொருத்தமானதே.
வேறு சிலர் HISTORIC CONFERENCE என்றார்கள். 60 ஆண்டுகள்
ஆனதால் மட்டுமல்ல. தேசிய மயமாக்குகிற கோரிக்கையை
1951 ல் பிறந்தவுடன் வைத்தது , 1956 ல் 245 கம்பெனிகளை
இணைத்து எல் ஐ சி யை உருவாக்கியவுடன் ஊழியர்களின்
ஊதிய-பணி நிலைமைகளை சீராக்க எடுத்த முயற்சிகள், 1960
களில் பொறிமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டம், 1970 களில்
பகுதிக் கதவடைப்பை எதிர்கொண்டது, 1980 களில் காலவரையற்ற
வேலை நிறுத்தம் மற்றும் எல் ஐ சி யை ஐந்து கூறுகளாக்குகிற
மசோதாவை எதிர்த்தது, 1990 களில் தனியார் மய எதிர்ப்பு என
வரலாறு முழுவதிலும் இடையறாது போராடி வந்துள்ள சங்கத்தின்
மாநாடை வரலாறு படைக்கும் மாநாடு என்று அழைக்காமல் வேறு
எப்படி அழைக்க முடியும்!

AIIEA's conference is like red army parade in stalin guard after its victory over hitler,i feel like the same on seeing my beloved leaders in dias make their deliberations. We as a soldier of AIIEA will definitely carry forward the message of the conference.
ReplyDelete