திருமங்கலம் பார்முலாவைச் சுஜிபி ஆக்கிவிட்டார்கள்
அமெரிக்காக்காரர்கள்.
அமெரிக்காவின் அண்மைய செனட் மற்றும் பிரதிநிதிகள்
சபைக்கான தேர்தல்களில் பணம் பெரு மழையாய்க்
கொட்டியிருக்கிறது. அமெரிக்க நீதி (?) மன்றமும்
தேர்தல்களில் "நிறுவன நிதி" புழங்குவதற்கு தடை
இல்லை என்று தீர்ப்பு வழங்கிய பிறகு கேட்கவா
வேண்டும். இந்திய ருபாய் மதிப்பிற்கு 18000 கோடிகள்
வாரி இறைக்கப்பட்டுள்ளன.ஒபாமாவுக்கு
அதிபர் தேர்தலில் வாக்களித்த இளைஞர்கள்,
போர்வெறி எதிர்ப்பாளர்கள், சிறுபான்மையினர்,
தொழிலாளர்கள் ஆகியோர் எல்லாம் நம்பிக்கை
இழந்திருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள்
தெரிவித்திருக்கிறார்கள். ( ஒபாமா வருகையை எதிர்த்து
ஆர்ப்பாட்டம் அறிவித்த இடதுசாரிகளுக்கு அறிவுரை
வழங்கிய வைகோ அவர்களுக்கு இது சமர்ப்பணம்.
நீளக் கறுப்புத் துண்டை மேலேயும் கீழேயும் இறக்குகிற
அசைவுகளோடு ஆக்ரோஷ தமிழில் அருவி போல்
கொட்டுகிற திரு வைகோ, ஒபாமாவை இயக்குகிற
கரங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்).
இப்படி பணவெள்ளத்தில் நீந்திக் கரையேறியவர்களில்
ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர்களும்
விதி விலக்கு அலல. எனினும் அதிகமான
பணம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் அடுக்கு மாடிகளின்
அத்தனைக் கூரைகளையும் பொத்துக்கொண்டு
பொழிந்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஒபாமாவுக்கு எதிராக
பிரச்சாரக் களத்தில் கடுமையாகப் பணியாற்றிய "டீ பார்ட்டி
க்ரூப்ஸ்" க்கும் பணம் பாய்ந்துள்ளது."நிறுவனமாகிற
அரசியல்" ( CORPORATISATION OF POLITICS )
என்ற போக்கின் வெளிப்பாடே இது.
யார் யாருக்கோ யார் வேண்டுமானாலும் அண்ணனாக
இருக்கலாம். உலகத்தின் அண்ணனே ! என்ற சுவரோவியமோ,
கட் அவுட்டோ வேண்டுமென்ற ஆசை அமெரிக்காவுக்கு
மட்டுமே உண்டு.
( Read "Resurgence of the right in US polls " by Arunkumar in
Peoples democracy - Nov 1 to 7 , 2010 )
No comments:
Post a Comment