கான்பூர், நவ. 12-
உணவுப் பாதுகாப்பு, தனியார்மய எதிர்ப்பு, உழைக்கும் வர்க்க உரிமை பாது காப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்கான இயக் கங்களை தீவிரப்படுத்து வோம் என்ற உறுதிமொழி யுடன் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் ஒன்பதாவது மாநாடு முடி வுற்றது.
மாதர் சங்கத்தின் ஒன் பதாவது அகில இந்திய மாநாடு நவம்பர் 9 முதல் 12 வரை கான்பூரில் நடைபெற் றது. அனைத்து வடிவங் களையும் கொண்ட பழமை வாதத்தை எதிர்த்து பிரச் சாரங்களை வலுப்படுத்த மாநாடு தீர்மானித்தது. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் இளை யோரின் உரிமைகளைப் பாதுகாப்பதென்றும், மத வெறி தாக்குதல்களை எதிர்ப்பதென்றும் மாநாடு முடிவு செய்தது.
மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பதில் இடதுசாரி இயக்கங்கள் முன்னிலை யில் உள்ளன. எனவே, ஆளும் வர்க்கங்கள் நாடெங் கும் குறிப்பாக மேற்குவங்கத்தில் திரிணாமுல் - மாவோ யிஸ்ட் கூட்டணி கட்டவிழ்த்து விடும் இடதுசாரி எதிர்ப்பு பிரச்சாரங்களை நேருக்கு நேர் மறுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்க அமைப்புகளுக்கு மாநாடு அறைகூவல் விடுத்தது.
எதிர்வரும் மூன்றாண் டுகளில், தலித், சிறுபான்மை யினர், பழங்குடிப் பெண்கள் ஆகியோர் சந்தித்து வரும் அடக்குமுறை வடிவங் களை முன்னுரிமை அடிப் படையில் மாதர் சங்கம் எதிர்த்துப் போராடும். மேலும் இளம் பெண்களும் தனிநபராக நிற்கும் பெண் கள் பிரச்சனைகளிலும் இயக் கம் கவனம் செலுத்தும்.
பெண்கள் மற்றும் சிறுமியர் மீது நடத்தப்படும் பல்வடிவங் கொண்ட வன் முறைகளை எதிர்த்தும், பாலியல் அடிப் படையில் நடைபெறும் கருக்கலைப்பு களை எதிர்த்தும், வரதட் சணை முறையை எதிர்த் தும் இயக்கங்கள் நடத்தப் படும். தந்தை வழிச் சமுதா யம், நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தும் தாக்கங்களை எதிர்த்தும், திருமண அடிப் படையில் சொத்துரிமை உள்ளிட்ட சட்ட உரிமை களை பாதுகாக்கவும் இயக் கங்கள் நடத்தப்படும் என் றும் மாநாடு முடிவு செய்தது.
வர்த்தகமயமாக்கப் பட்டு வரும் ஊடகங்களை எதிர்த்தும், சம்பிரதாயங் கள் மற்றும் மத நம்பிக்கை களை சந்தைப் பொருட் களாக்குவதை எதிர்த்தும் மாநாடு தலையிட முடிவு செய்தது. நாட்டின் மதச்சார்பற்றத் தன்மையை யும், ஜனநாயக மரபுகளை யும் வலுப்படுத்தும் வகை யில் கலாச்சார மாற்று நட வடிக்கைகளை உருவாக்க வும் மாநாடு முடிவு செய்தது.
Saturday, November 13, 2010
பழமை வாதம் -ஒடுக்குமுறை- வர்த்தக மயம் எதிர்த்துப் போராட ஜனநாயக மாதர் சங்க மாநாடு உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment