Monday, January 3, 2011

ஹேப்பி நியூ இயர்?

பொருளியல் அரங்கம்
-க.சுவாமிநாதன்

* சாதாரண மக்களுக்கு இது ஹேப்பி நியூ இயரா? என்ற சந்தேகத்தோடே 2011ல் அடியெடுத்துவைக்கிறார்கள். உணவுப் பொருள் பணவீக்கம் 14.44 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்தி விட்டோமென்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பெருமை பேசுவதற்கு முன்பாகவே முட்டை, பால், காய்கறி, பழங்களின் விலைகளெல்லாம் எக்கச்சக்கமாக ஏறியிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டில் இதே காலத்தில் 21.29 சதவீதம் ஏறியிருந்தது. இப்போது 14.44 சதமாக குறைந்திருக்கிறது என்று ஆறுதல் அடையாதீர்கள் ! அந்த 21 சதவீதத்திற்கும் மேலே ஏறி, ஏறி அதிலிருந்து 14 சதவீதம் ஜம்ப் ஆகியிருக்கிறது இப்போது.

* பைசாக்களுக்கும் 2011ல் மகிழ்ச்சி இருக்காது போலிருக்கிறது. 50 பைசா தவிர அதற்கு கீழ் மதிப்பு உள்ள பைசாக்களெல்லாம் தங்களது நாட்களை இனிமேல் எண்ண வேண்டியதுதான். அவற்றின் ஆயுளெல்லாம் 180 நாட்கள்தான் என நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2011 முதல் 50 பைசாதான் குறைந்தபட்ச பரிமாற்ற நாணயமாகச் சந்தையில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதற்கேற்றாற்போல எல்லாச் சரக்குகள், சேவைகள், வரிகளெல்லாம் வட்டமிடப் படுமாம் (சுடிரனேiபே டீகக). விலைவாசி எகிறிக்கொண்டே போனால் நாலணாவுக்கு எப்படி மரியாதை இருக்கும்?

* ஆதாரத் தொழில்களும் சோகத்தோடுதான் 2011ல் அடியெடுத்து வைக்கின்றன. கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு, நிலக்கரி, மின்சாரம், சிமெண்ட், உருக்கு ஆகியவற்றின் வளர்ச்சி 2.3 சதவீதமாகவே நவம்பர் 2010ல் இருந்துள்ளது. 21 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய சரிவாகும் இது. பெட்ரோலியச் சுத்திகரிப்பு 3.7 சதவீதமும், சிமெண்ட் 11.6 சதவீதமும் சுருங்கியிருக்கின்றன. ஆதாரத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த தொழில்துறையின் வளர்ச்சியே தடுமாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

* எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்திற்கும் (டீசூழுஊ) 2011ல் நாள் குறிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 அன்று கூடிய மத்திய அமைச்சரவை டீசூழுஊ பங்கு விற்பனையை மார்ச் 2011க்கு முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இப்போது டீசூழுஊயில் அரசாங்கத்தின் பங்கு 74.14 சதவீதம். மார்ச் 2011 பங்கு விற்பனைக்குப் பிறகு 69.14 சதவீதமாகக் குறைந்துவிடுமாம். இந்த 5 சதவீத விற்பனையின் மதிப்பு ரூ.13,000 கோடிகள்.

* 2011ல் சந்தோஷமாக நுழைகிறவர்கள் யார் தெரியுமா? கேரிஃபோர் (ஊஹசுசுநுகுடீருசு) என்கிற உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் தில்லியில் தனது முதல் “கேஷ் அண்டு கேரி” கடையைத் திறந்துள்ளது. கேரிஃபோரின் பிரம்மாண்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. நம்ம நாட்டிலுள்ள எல்லா “பாட்டா” (க்ஷஹகூஹ) காலணிக் கடைகளின் ஒட்டுமொத்த விற்பனையை விட கேரிஃபோரின் வெளிநாட்டுக் கடை ஒன்றின் விற்பனை அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏற்கனவே வால்மார்ட் நிறுவனம் அமிர்தசரஸ், ஜிரக்பூர், ஜலந்தர், கோட்டா நகரங்களிலும், ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனம் ஐதராபாத், பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களிலும் இத்தகைய 10 கடைகளைப் போட்டுள்ளன. பல பிராண்டு சில்லரை வணிகத்தில் (ஆரடவi க்ஷசயனே) அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாததால் இக்கடைகளில் மொத்த விற்பனை மட்டுமே இப்போதைக்கு நடைபெறும். அதாவது உணவுப் பொருட்கள் என்றால் நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்காமல் ஓட்டல்களுக்கு சப்ளை செய்வார்கள், 2011ல் பல பிராண்டு சில்லரை வணிகமும் திறந்துவிடப்படுமென்று ஆவலோடுகாத்திருக்கிறார்கள்.



கொசுறுத்தகவல்கள்

* இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளரான அதானி குழுமம் ஆஸ்திரேலியா “லிங்க் எனர்ஜிஸ் கலலி சுரங்கத்தை” 3 பில்லியன் டாலர்களுக்கு (ரூ.13,,500 கோடிகள்) வாங்கியுள்ளது. இதுதான் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய “கையகப்படுத்துதல்” என்கிறார்கள்.

* வாஷிங்டன் போஸ்ட் கம்பெனி தனது “நியூஸ் வீக்” இதழை கலிஃபோர்னியா பில்லியனர் சிட்னி ஹார்மனுக்கு விற்றுவிட்டது. நட்டத்தில் ஓடுவதுதான் காரணம்.

* ஜரோப்பாவில் 1999 ஜனவரி 1 முதல் “ஒரே நாணயம், ஒரே எதிர்காலம்” (டீநே ஊரசசநnஉல, டீநே கரவரசந) என்ற முழக்கத் தோடு பொது நாணயமான “யூரோ” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது யூரோ மண்டலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரண மாக “ஒரே நாணயம், ஒரே தலைவிதி” (டீநே ஊரசசநnஉல, டீநே குயவந) என்று பொருளாதார ஆய்வாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.


No comments:

Post a Comment