Saturday, September 11, 2010

Com RS Durairaj's(VP ICEU T veli) article in THEEKATHIR on sep 10th 2010

கழுகுக் கண்களில் கோழிக் குஞ்சு-
ஆர்.எஸ்.துரைராஜ்

சமீபத்தில் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் நடந்த ஜி-20 நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க ஜனாதிபதி யும் சந்தித்து பேசியபோது, பராக் ஒபாமா இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்துவதில் இன்னும் தாமதம் ஏன்? என்று கேட்டதாகவும், அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், வெகுவிரைவில் ஆவன செய்வதாகக் கூறியதாகவும் சொல் லப்படுகிறது. அந்த வேகத்தில்தான் ஜி-20 மாநாடு முடிந்து இந்தியா திரும்பும்போது விமானத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இந்திய இன்சூ ரன்ஸ் துறையில் வெளிநாட்டு நேரடி முத லீடு வெகுவிரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

2010 நவம்பர் 7ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வரும்போது இந்திய இன்சூரன்ஸ் துறையை தாரை வார்ப்பதற்கான முஸ்தீபுகளை மன்மோகன் அரசு செய்து வருகிறது.

தத்தளிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் சராசரியாக மாதம் 10 வங்கிகள் திவாலாகி வருகின்றன. வேலை இல்லாத அமெரிக்க இளைஞர்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தன் நாட்டு மக்களின் வேலைகளை பாது காக்க வேண்டி இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்குக் கொடுக்கும் வேலைகளை (அவுட்சோர்சிங் முறையில்) நிறுத்தச் சொல்லி ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் மீது தாக்குதல்கள் தொடர்கிறது. இராக் மக்களின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளான அமெரிக்க ராணுவம் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பின்லே டனை தேடிக் கொண்டே இருக்கிறது அமெ ரிக்க ராணுவம். இன்னும் கிடைத்தபா டில்லை.

சர்வதேசச் சந்தையில் டாலரின் வீழ்ச்சி தொடர்கிறது. வலுக்கட்டாயமாக அதன் மதிப் பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, டாலரின் உண்மை மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் பல பிரச் சனைகளில் வரலாறு காணாத அளவு தத்த ளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதி பரின் கண்களில் இந்திய இன்சூரன்ஸ் துறை குறியாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

“நாய் செத்தாலும் அதன் கண் கோழியின் மீது” என்பது போல அமெரிக்கக் கழுகின் கண்கள் இந்திய கோழிக் குஞ்சு மீது உள்ளது.

வளர்ச்சியின் உச்சத்தில்

கடந்த ஜூன் 2010 வரை உள்ள காலாண் டில் இந்திய நாட்டில் மொத்தம் பெறப்பட்ட இன்சூரன்ஸ் வணிகத்தில் பொதுத்துறை எல்ஐசியின் பங்கு 74 சதவீதமாகும். இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இன்சூரன்ஸ் சேமிப்பின் பங்கு 4.51 சதவீதம். இது ஐரோப்பிய நாடுகளின் இன்சூரன்ஸ் சேமிப்பான 3.57 சதவீதத்தை விட அதிகம், இந்தியாவில் “இன்சூரன்ஸ் என்றால் எல்ஐசி” என்ற மக்களின் நம்பிக்கைதான் இந்த வளர்ச்சிக்கான முக்கியமான காரணம்.

* கடந்த ஆண்டு மட்டும் ரூ.1.84.000 கோடி பிரிமியத்தை பொது மக்களிடமிருந்து பெற்றுள்ளது.

* 27 கோடி பாலிசிதாரர்கள்.

* 11 லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு.

* இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை 1 கோடி புதிய பாலிசிகள்.

* ரூ.5 கோடி முதல் போட்ட இந்திய அர சிற்கு கடந்த ஆண்டு கொடுத்த பங்கா தாயம் மட்டும் ரூ. 1029 கோடி.

* அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ.5,30,000 கோடி களுக்கு மேல் ஒதுக்கியுள்ளது எல்ஐசி.

* 99.87 சதவீதம் உரிமத் தொகையை வழங்கியுள்ளது.

* நமது நாட்டின் ஐந்தாண்டு திட்டங்க ளுக்கு எத்தனை கோடி ரூபாயானாலும் தரத் தயாராக உள்ள ஒரு மக்கள் நிறு வனம்.

நாடு முழுவதும் 2048 கிளைகளை மட் டுமே கொண்ட ஒரு பொதுத் துறை நிறுவனத் திற்கு இந்த வளர்ச்சி என்பது ஒரு சாதனை.

சாதகமான இந்திய இன்சூரன்ஸ் சந்தை

ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பிடுகையில். இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 60 சதமானத்திற்கு மேல் 25 வயதிற்குட்பட்டவர்கள், இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ள சந்தை இந்திய இன்சூரன்ஸ் சந்தை. அது மட்டுமல்லாமல் இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமும் அவர்களைக் கவரக் கூடிய வகை யில் உள்ளது. இந்திய நாட்டு மக்களின் சேமிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 35 முதல் 37 சதவீத இடத்தைப் பெறு கிறது. எனவே, அவர்களுடைய இன்சூரன்ஸ் பொருட்களை அதிக அளவிற்கு விற்க முடியும். இதுவும் ஏகாதிபத்தியத்தின் கழுகுக் கண்களை உறுத்துகிறது.


தாக்குதல்கள்

எல்ஐசி சட்டத் திருத்த மசோதாவில் பாலிசிதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் போனஸ் தொகையை 95 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம். (டுஐஊஹடீஐ) உள்ளிட்ட சங்கங்களின் தொடர்ச்சி யான பிரச்சாரமும். நிதி அமைச்சகத்திற்கான நிலைக் குழுவில் தலைவர்கள் எடுத்தியம் பிய கருத்துக்களும், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம் எம்.பி.க்களை சந்தித் துத் திரட்டிய ஆதரவும் நிலைக்குழுவினை பாலிசிதாரர்களின் போனஸ் தொகை 95 சதவீதமாக தொடரப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கச் செய்துள்ளது. நிலைக்குழு வின் இது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் மத்திய அரசு எதிர்பார்த்த அளவிற்கு அமைய வில்லை.

இன்று அந்த அறிக்கையை அளித்த நிலைக்குழுவின் தலைவராக இருந்த பாஜக வைச் சார்ந்த முரளி மனோகர் ஜோஷி மாற்றப் பட்டு, “தனியார் மயம் தான் தீர்வு” என்று உறுதி யான கருத்து கொண்ட யஷ்வந்த் சின்கா அதன் தலைவராக மாற்றப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்தியத்தின் அதிகாரம் இந்திய ஆளும் கட்சியின் மீது மட்டுமல்ல, எதிர்க்கட் சியின் மீதும் செல்லும் என்பது தெளிவாகி றது. எல்ஐசியைப் பொறுத்தவரையில் 97 சத வீதம் வணிகம் முகவர்கள் மூலமே வருகிறது. எனவே இதனை சீர் குலைக்கவும், முகவர் களுக்கான குறைந்த பட்ச வணிக இலக் கினை அதிகரிப்பது, முகவாண்மை தொடர வேண்டுமானால் புதிய புதிய கட்டுப்பாடுகள். ஸ்வரூப் கமிட்டி பரிந்துரைகளை அமலாக்க முயற்சி என முகவர்கள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை எல்ஐசியை சீர்குலைப்பதும், இந்திய மக்க ளின் சேமிப்பை வெளிநாட்டு முதலாளிக ளின் கையில் கொடுப்பதற்குமான நடவடிக் கைகளே அன்றி வேறில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, இந்திய நாட்டு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கியது தன் மாமியார் இந்திரா காந்தி என்று சொல்லிச் சொல்லி வாக்குகளை வாங்கிய திருமதி சோனியா காந்தியும் சரி, இந்திரா காந்தியின் வாரிசுக ளாக தங்களை அறிவித்துக் கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்களும் சரி, அதே பொதுத் துறை வங்கிகளையும், இன்சூரன்ஸ் துறையையும் சீர்குலைப்பது ஏன்? மக்கள் சொத்தை பாதுகாக்க மக்கள் திரள வேண்டும். எதிர்ப்புகள் வலுப்பட வேண்டும். மனசாட் சியைத் தொலைத்த மத்திய அரசை தட்டி எழுப்பும் வண்ணம் இது மக்கள் எழுச்சியாக மாற வேண்டும்.

கட்டுரையாளர், துணைத்தலைவர், நெல்லை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்.

1 comment:

  1. GOOD ARTICLE WITH LATEST FIGURES OF LIC AS ON 31st MARCH 2010. K SWAMINATHAN

    ReplyDelete