யுவர் மனி... தெயர் பேலஸ்...
( YOUR MONEY... THEIR PALACE)
இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பை மிரர் பத்திரிகையில் யுவர் மனி... தெயர் லஞ்ச் என்ற செய்தி கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. எல் ஐ சி நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு லஞ்ச் கூப்பன் வழங்கி உள்ளது பற்றிய விமர்சனமே அது.
தொழிலாளர்கள் போராடுவதும் ஒரு பயனை பெறுவதும் உலகம் முழுவதும் நடந்தேறுகிற ஒன்றுதான். இப்படி ஒரு பகுதி தொழிலாளர்கள் புதிய பயனை பெறும்போது அதற்கு எதிரான உணர்வை பிற பகுதி தொழிலாளர்களிடம் உருவாக்குகிற திட்டமிட்ட வேலையும் உலகம் முழுவதும் அரங்கேறுவதுதான். உனக்கும் கீழே உள்ளவர் கோடி,, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு... என்று அறிவுறுத்துவதும், கொஞ்சம் முன்னேறிய நிலையில் உள்ள தொழிலாளர்கள் அனுபவிப்பதுதான் கீழே உள்ளவர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாக சித்தரிப்பதும் ஓர் உள்நோக்கம் கொண்ட அரசியல் ஆகும்.
2008 முதல் 2010 வரையிலான காலம், உலகம் முழுவதிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆனால் இந்திய நாட்டின் பில்லியனர்களின் எண்ணிக்கை மட்டும் 52 ஐ தொட்டுள்ளது. உலக பில்லியனர்களின் எண்ணிக்கையும் 2008 லிருந்து 2009 ல் 793 லிருந்து 1011 ஆக உயர்ந்துள்ளது. ஹைட்டி நாட்டில் உணவில்லாமல் மண் உருண்டைகளை குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டி விடுவதாக செய்திகள் வருகின்றன.பசியால் அழும் பச்சிளம் குழந்தைகளின் நாக்கில் போதையூட்டும் பச்சிலையை தடவி தூங்க பண்ணுகிற சோகங்களும் உண்டு. இப்படி பளபளக்கிற உலகத்தையும், பரிதவிக்கிற உலகத்தையும் ஒரு சேர உருவாக்குகிற உலகமய பொருளாதார பாதை பற்றியெல்லாம் மும்பை மிர்ரருக்கு கவலை இல்லை. கன்னித் தீவு மந்திரவாதி மூசாவின் அதிசயக் கண்ணாடியில் ஏழைகளின் துயரம் தெரியாதோ என்னவோ! எனவே யுவர் ஹங்கர்... தெயர் பில்லியன்ஸ்... என்று எழுதுகிற ஊடக தர்மம் அதற்கு இல்லை.
முகேஷ் அம்பானி மும்பையில் கட்டுகிற 27 மாடி அரண்மனை பல கோடி ரூபாய்களை மன்னிக்கவும் டாலர்களை விழுங்கி எழும்புவதில் நமக்கு ஒன்றும் பொறாமை இல்லை. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள விவசாயக் கடனில் 50% க்கு மேல் மும்பை மாநகருக்குள் பட்டுவாடா ஆகியிருப்பதும் விநோதமானது. அப்பயனை அனுபவித்துள்ள இரண்டு பெரிய தொழிலகங்களில் ஒன்று, 27 மாடியிலே எங்கு தூங்குவது என்று தெரியாமல் தவிக்கிற அம்பானியுடையதுதான். இரண்டு லட்சம் விவசாயிகள் பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டிருப்பது பற்றி மும்பை மிர்ரருக்கு என்ன கவலை? இது சாதாரண விவசாயி முகம் பார்த்து தலை சீவும் கண்ணாடி இல்லையே! எனவே யுவர் லைப் ... தெயர் பேலஸ்... என்று எழுதுகிற தார்மீகம் அதற்கு இல்லை.
சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் பெருச்சாளிக்கு இரையாகிற அரசு கிட்டங்கிகளிலுள்ள தானியங்களை ஏழை எளியோருக்கு இலவசமாக தர பிரதமருக்கு மனசு இல்லை. 80000 கோடி செலவில் எல்லோருக்குமான ரேசன் திட்டத்தை அமலாக்கலாம் என்றாலும் அதற்கும் மன்மோகன் மனம் இரங்கவில்லை. ஆனால் நிறுவன வரிகளில் சலுகையாக ஒரு ஆண்டில் சில நூறு குடும்பங்கள் அனுபவிப்பது மட்டுமே 84000 கோடிகள் ஆகும். யார் கேட்பது? மனக் கீறல் விழுந்த மும்பை கண்ணாடியில் நடுத்தர வர்க்கத்திற்கு கிடைக்கிற சில நூறுகள் எந்த வகையிலும் யாருடைய வயிற்றிலும் அடிப்பதில்லை என்பது தெரியாது போலும். அது போல மத்திய பட்ஜெட் டாட்டாகளுக்கும் அம்பானிகளுக்கும் வாஞ்சையோடு வழங்குகிற பல்லாயிரம் கோடிகளும் அதில் அடிக்கிற பாசப் பேரொளியால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. எனவே யுவர் காஸ்ட் ... தெயர் இன்சென்டிவ்... என்று எழுத அவர்களின் கை மறுக்கிறது.
இன்றைக்கு போராடுகிற பகுதியை பார்த்து இன்னொரு பகுதி போராட கற்றுகொள்ளக்கூடாது என்ற அரசியலின் பிரதிபலிப்பே மும்பை மிர்ரர்.
அது பளபளக்கிற இந்தியா அழகு பார்க்கிற கண்ணாடி.
Initially i thought we need not react to the news article "your money.. their lunch.." published in MUMBAI MIRROR. After seeing Com Geetha's mail to this blogspot i have posted this article.
ReplyDeleteComrade, Kindly make it a SZIEF Circular
ReplyDeleteor allow us to reproduce
A fitting reply to the corporate frindly media. Greetings.
ReplyDeleteDear Comrade, Given below are the various comments published in Mumbai Mirror against
ReplyDeletetheir article
Your Money - Their Lunch is an article with bad taste. Mumbai Mirror reflects the ugly face of Capitalist Media who cry foul when workers get any benefit and keep mum when the Rich were showered with benevolence by Government. Why you people did not speak on the 84,000 Crores incentive given in Corporate Tax.
if you have courage, you must publish not only this comment, also the one sent by me on yesterday.
S.Raman, Vellore, ramanraghunandhan@licindia.com Dated : Thursday, September 23, 2010 07:04 PM
it is rediculas to write that lic employees are bribed to come in time.in fact those who will report late , will loose the incentive. more over it is also likely that habitual late comming of some of the employees will be monitored closely and suitable disciplinary actions can also be initiated by the managment against erring employees. in many other orgenisations, such benifits are already avalable from years , which has not been criticised by the correspondant while criticising the licians benifit. the corporation is displaying the performance extremely well in the competetive era, and it is because of the devotion of duty of the lacs of employees of the corporation since, it,s incorporation from 1956., that this has become possible.this factor is totally ignored while passing this comments. it has certainly hurt me as a tru lician that i am now bribed by the managment to come in time. the remark posted is so irresponcible in the nature, that hardly it should carry any weightage.more over if the few employees are irregular, can it be applied to all 1.4 lecs employees of the corporation? it will be fair if this view is published in your paper and the correspondant who has written the article further examines the other side of the coin also.
MAULIK S DHEBAR, mauliks_dhebar@licindia.com Dated : Tuesday, September 21, 2010 02:19 PM
The readers are advised to see the pay out of CEOs and the Chairman of LIC, who is getting very less salary and working 24 hours leaving his/her family. The news persons should see the sophisticated lifestyle of some political mass, who are crorepathian. No crorepathian in LIC families. What about news the politician MPs are demanding for huge salary to do public service. Within five years they are getting more and more when comparing to LICians. The LIC Management just wanted to pay the MEALS to its own employees, who are poor and even don't have crorepathy properties, shares, and living in sophisticated life. Hence, in my opinion what LIC is doing to its own employees/officers is just a drop of water to satisfy their thirsty.
N. KRISHNAMURTHY, n.krishnamurthy19@in.com Dated : Monday, September 20, 2010 09:19 PM
சாமி! இது இந்திய மொழிகள் அத்துணையிலும் மொழிபெயர்க்கப் படவேண்டிய இடுகை.முதலில் ஆங்கிலத்தில் வரட்டும்.அந்தந்த மொழிக்காரர்கள் மொழிபெயர்த்துக் கொள்ளட்டும்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
ReplyDeleteசார், நல்ல இடுகை. படித்தேன். சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் சரியான எதிர்த் தாக்குதல். 'அம்பானியின் அராஜகங்களை எதிர்த்து' என்று வெளிப்படையாக கட்சியோ அல்லது கட்சியின் அமைப்புகளோ போராட்டங்களை இதற்கு முன்பு கொண்டு சென்றிருக்கும் பட்சத்தில் அவற்றையும் இந்த இடுகையுடன் இணைத்தால் நன்றாயிருக்கும்.
ReplyDeleteyour money... their palace,
ReplyDeleteyour hunger... their billions,
your life... their palace,
your cost... their incentive
these really super punch
The dominant class will not, however, give up comfort and power without a severe struggle.”The Red Terror”, wrote Trotsky, “is a weapon utilized against a class doomed to destruction, which does not wish to perish”. This animal, in other words, is naughty; ‘When it is attacked, it defends itself without realizing that its skeleton is needed for a museum of specimens.”D.GOPALRAJ,GIC,MADURAI.
ReplyDeleteSir, the article is superb. I have expected this article in the Insurance worker. Please publish the same in the forthcoming Insurance worker so that every employee of the Corporation will know the reply made to the Mumbai mirror.
ReplyDeleteWith Greetings and Red Salute
C.R.ANAND, HGA, SINGANALLUR BRANCH, COIMBATORE