Friday, January 14, 2011

பொருளியல் அரங்கம்


-க.சுவாமிநாதன்

நானோ ‘தீக்குளிப்பு’

டாடாவின் செல்லத் திட்டமான நானோ எதிர்பார்த்த இலக்கை 2010 இறுதியில் எட்ட வில்லை. ஒரு லட்சம் கார் விற்பனையை 2010க் குள்ளாக எட்டுவதே இலக்காக இருந்தது. ஆனால் இதுவரை விற்பனை 77000 மட்டுமே ஆகும்.

நானோ 2009ல் அறிமுகமானபோது அதற்கு விண்ணப்பிப்பதற்கு லட்சக்கணக்கான பேர் அலைமோதினார்கள். அவர்களில் 1,55,000 பேர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இப்போது கார் ரெடி ! என்கிறது டாடா நிறு வனம். ஆனால் விண்ணப்பித்தவர்கள் வாங்கத் தயங்குகிறார்கள்.

ஜூலை 2010ல் 9000 கார்கள் விற்பனையா கின. அதற்குப் பிறகு விற்பனை விழுந்துவிட் டது.நவம்பர் 2010 ல் 509 கார்கள்தான் விற்பனை ஆகின. டிசம்பரில் 5784 ஆக விற்பனை உயர்ந் துள்ளது. இப்படிப்பட்ட சரிவுகளால் 1 லட்சம் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. காரணம் என்ன?

நானோ கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விடுகின்றன என்ற புகார்கள் நிறைய கிளம்பியது தான். இதனால் தீ தடுப்பு வசதிகளை இலவச மாக செய்து தருவதாக டாடா நிறுவனம் அறி வித்துள்ளது. 4 ஆண்டுகள் அல்லது 60000 கி.மீ வரை உத்தரவாதம் உண்டு என்றும் கடந்த மாதம் அறிவித்துள்ளது.

“நெருப்பாற்றில்” நீந்துவது என்பது

இது தானோ! கரையேறுமா நானோ!

பல் தேய்க்க ரூ.1850 கோடி

பாதித் தூக்கத்தில் பல் தேய்க் கிறோமே, அதற்கான சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா? டூத் பேஸ்ட் விற்பனை மட்டும் ஓராண்டில் ரூ.1850 கோடிகளாம்! டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் லோக்கல் பற்பொடி, வேப்பங்குச்சி ஆகிய வற்றால் பல் விளக்குபவர்களைச் சேர்க்காமலேயே இவ்வளவு பணம் புழங்குகிறது.

பராக்! பராக்! இதோ இன் னொரு டூத் பேஸ்ட் சந்தைக்கு வருகிறது. ஜி.எஸ்.கே என்று அழைக்கப்படும் கிளாக்ஸோஸ் மித்க்லின் நிறுவனம் “சென்சொடின்” என்கிற பற்பசை யை இந்தியச் சந்தையில் இறக்கு கிறது. இப்பற்பசை ஏற்கனவே அமெ ரிக்காவில் 10 சதவீத சந்தைப் பங்கை வைத்துள்ளது.

சென்சொடின் இன்னும் ஐந் தாண்டுகளில் ரூ.150 கோடி விற்ப னை யை எட்டுமென்பதுதான் இலக்கு. இந்தியாவில் 17 சதவீதமானவர் களுக்கு பற்கூச்சம் உண்டாம். அவர்களையே சென்சொடின் தனது சந்தை இலக்காக வைத்துள் ளதாம். கூச்சத்தில் எவ்வளவு லாபம் பாருங்கள்! லாபத்திற்கு ஏது கூச்சம்!

கோல்கேட்டிற்கு போட்டியாக களம் இறங்கும் சென்சொடின் 15000 பல் டாக்டர்களின் தொடர்புகளை கைப் பற்றப் போகிறதாம். எனவே இனி பல டாக்டர்கள் சென்சொடினின் மகி மை பற்றி நோயாளிகளிடம் வகுப்பு எடுப்பார்கள்.

சரி! என்ன விலை?,

சொன்னால் பல் கூசி விடும்.

40 கிராமுக்கு 42 ருபாய் ஆகும். கோல் கேட்டைப் போல மூன்றரை மடங்கு.

நொறுக்குத் தீனி

* கோக்க கோலா, சச்சின் டெண்டுல் கரை தனது விளம்பர நாயகனாக வளைத்துப் போட்டிருக்கிறது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பெறப் போகிற தொகை ரூ.20 கோடி. கோக்க கோலா பருகுபவர்கள் எல்லோரும் நாம் சச்சினுக்கு சம்பளம் தருகிறோம் என்ற குஷியோடு குடிக்கலாம்.

* அம்மா.. அக்கா.. என்று லேடீஸ் கைப்பைகளை கூவி விற்று கல்லாக் களை நிரப்பப் போகிறார்களாம் வி.ஐ.பி மற்றும் சாம்சோனைட் நிறுவனங்கள். இதற்கான சந்தை ரூ.1500 கோடிகள் என்பதால் புதிய சரக்குகளோடு குதிக்கிறார்கள்.

* “பண வீக்கம் அதிகம். அதிலும் உணவுப் பொருள் பண வீக்கம் ரொம்ப அதிகம். இதைக் கட்டுப்படுத்த எல்லா கருவிகளும் நாம் கைகளில் இருக்கின்றனவா! என்பது சந்தேகம். பண வீக்கம், வரிகளை விட மோசமானது. உங்களுக்கு வருமானம் அதிகமாக இருந்தாலும் அதைப் பணவீக்கம் சாப்பிட்டு விடும்”

இவ்வளவு ‘கரிசனமாக’ பேசியிருப்பவர் யார் தெரியுமா! நம்ம ப.சிதம்பரம் அவர்கள்தான்!

(நன்றி :பிசினஸ் ஸ்டான்டர்டு - 6.1.2011)

ஜெட் வேக வளர்ச்சி

கலாநிதி மாறன் 2010ல் ஸ்பைஸ் ஜெட் (ளுஞஐஊநு துநுகூ) விமான நிறுவனத்தின் 39 சத வீதப் பங்குகளை வாங்கி விட் டார்.

ஸ்பைஸ் ஜெட் மலிவுக் கட்டண விமானம் என்று பெயர் பெற்றது. ஆனால் அதன் ஆண்டு வருமானம் ரூ. 2181 கோடிகள். இது கலாநிதி மாற னின் பிரதான வணிகமான “சன் டி.வி.யின்” ஆண்டு வரு வாயான ரூ.1395 கோடிகளை விட அதிகமானதாகும்.

மாறனுக்கு 2010 அதிர்ஷ்ட ஆண்டு போலிருக்கிறது. அவரின் ரூ.100 கோடி மெகா தயாரிப்பான “எந்திரன்” திரைப் படம் இதுவரை ரூ.200 கோடி வசூலை அள்ளியிருக்கிறதாம்.

20 தொலைக்காட்சி சேனல்கள்... 48 எப்.எம் ரேடி யோக்கள் ...2 நாளிதழ்கள்... நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய டி.டி.எச் சேவை.. அதில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள்..

இந்த வரிசையில் கல் ஏர் வேஸ், ஸ்பைஸ் ஜெட்-ஐ வாங்கியதன் மூலம் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இவர் வாங்கிய 4 மாதங்களுக் குள்ளாக சர்வதேச விமானப் போக்குவரத்தை அந்நிறுவ னம் துவங்கி விட்டது. காத் மாண்டு, கொழும்பு ஆகிய நகரங்களுக்கு பறக்கிறது ஸ்பைஸ் ஜெட்

1 comment:

  1. நல்ல தகவல்கள்.......

    இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete