[untouchabilityeradicationfront] Dr.Ambedkar Film in Tirunelveli [1 Attachment] Inbox X
Inbox
PONNIAH ESAKKIMUTHU | Jan 7 (3 days ago) |
show details 9:59 PM (1 minute ago) |
தடைகளை உடைத்தெறிந்து வெளி வந்துள்ள அம்பேத்கர் திரைப்படம் தற்போது கோயம்புத்தூரிலும் திரையிடப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சி கோவைத் திரையிடலுக்கு காரணமாக இருந்துள்ளது. தமிழகம் முழுவதும் த மு எ க ச , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளின் முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்கதாகும். அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சேலத்தில் 4 காட்சிகளுக்கும், சென்னையில் 1 காட்சிக்கும், திருநெல்வேலியில் 1 காட்சிக்கும், மதுரையில் 1 காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பி எஸ் என் எல்
ஊழியர் சங்கம், இநதிய வங்கி ஊழியர் சம்மேளனம் ( பெபி) ஆகிய அமைப்புகளும் இத்தகைய பங்களிப்பைச் செய்துள்ளன. பேரா தங்கராஜ் விழைவது போல இத் திரைப்படம் காண்பதே இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.
இப்படி உழைப்பாளிகளின் அமைப்புகள் இப் பணியைச் செய்யும்போது "வெகுசன" ஊடகங்கள் கொஞ்சமும் தார்மீக உறுத்தலின்றி இத் திரைப்படத்தை புறக்கணிக்கின்றன. அம்பேத்கர் வாழ்ந்தபோதும் ஒடுக்குமுறையைச் சந்தித்தார். மறைந்து அரை நூற்றாண்டு கழிந்தும் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார். ஆனால் அவர் மூட்டிய கனலின் வெளிச்சம் இருட்டை விரட்டுகிறது.
No comments:
Post a Comment