Friday, January 28, 2011

பொருளியல் அரங்கம்
-க.சுவாமிநாதன்


எல்லோரும் தட்டும் சீனாவின் கதவு

எல்லா நாடுகளும் உலக வங்கியின் கதவு களைத் தட்டுவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சீனாவின் கதவுகளை உலக வங்கி தட்டுவது ஏன் தெரி யுமா?

கடந்த இரண்டு ஆண்டு களாக வளர்முக நாடுக ளுக்கு சீனா வழங்கி யுள்ள கடன் உலக வங்கி தந்துள்ள கடன் தொகை யை விட அதிகம் என பைனான்சி யல் டைம்ஸ் இதழ் மதிப்பிட்டுள் ளது.. சீன வளர்ச்சி வங்கியும், ஏற்றுமதி-இறக்குமதி வங்கியும் 2009 - 10 ஆம் ஆண்டில் 110 பில்லியன் டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4 லட்சத்து 95000 கோடிகள்) கடனாக வழங்கி உள்ளன. இதே காலத்தில் உலக வங்கி 100 பில்லியன் டாலர்களையே (ரூ.4 லட்சத்து 50000 கோடிகள்) கடனாக வழங்கி உள்ளது.

ரஷ்யா, வெனிசுலா, பிரேசில் ஆகிய நாடுக ளோடு எண்ணெய்க்கான கடனாகவும் ( டுடீஹசூளு குடீசு டீஐடு ) கானா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய நிறுவனங்களின் மின் இயந்திரங்களுக்காக வும் இக்கடன்கள் வழங்கப் பட்டுள்ளன.

உலக வங்கியோ, மற்ற கடன் நிறுவனங்களோ போடுகிற கடுமையான நிபந்தனைகள் இல்லாத தால் எல்லோரும் சீனக் கதவைத் தட்டு கிறார்கள். இதனால் உலக வங்கியும் சீனாவின் காலிங் பெல் லை அழுத்துகிறது. போட்டியைச் சமா ளிக்க சீனாவுடன் பேச்சு வார்த் தை நடத்தப் போவ தாக அது அறிவித்திருக்கிறது.

போன மச்சான்

இந்தியப் பங்குச் சந்தைக்கு 2011 ன் துவக்கம் மிகச் சோகமாகவே அமைந்திருந்தது. இந்த ஆண்டின் முதல் வணிக நாள் ஜனவரி 3 ஆகும். அதிலிருந்து 5 நாட்களுக்குள் முதலீட்டாளர் செலவு மதிப்பு 5 லட்சம் கோடி சரிந்தது. ஐந்து நாட்களில் 1337 புள்ளிகள் வரை மும்பை சென்செக்ஸ் வீழ்ந்தது. ஜனவரி 7 ஆம் நாள் இறுதியில் மொத்த பங்கு மதிப்பு 68 ,87 ,194 கோடிகளாக இருந்துள்ளது. ( பொருளாதார மாணவர்கள் இப்புள்ளி விவரத்தை குறித்துக் கொள்ளலாம்).

மும்பை சென்செக்ஸ் கணக்கிடப் படுகிற 30 பெரிய கம்பெனிகளின் பங்குகளின் வீழ்ச்சி மட்டும் ரூ. 2 லட்சம் கோடிகள். ரிலையன்ஸ், ஒஎன்ஜிசி, டிசிஎஸ், இன்போசிஸ், கோல் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆகிய வற்றின் பங்குகள் ரூ. 1 லட்சம் கோடி வரை சரிந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வழக்கம் போல பங்குச் சந்தை சரிய ஆரம்பித்தவுடன் நடையைக் கட்டினார்கள்.

ஜனவரி 20 அன்று 68 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தவுடன் மீண்டும் 19000 புள்ளிகளை கடந்திருக்கிறது. 2008 ஜனவரியில் தொட்ட 21000 புள்ளிகளை 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் எட்ட முடியவில்லை.ஆனாலும் 19000 ஐத் தொட்ட வுடன் போன மச்சான்கள் பூ மணத்தோடு திரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்தான்.

அப்பாடா!

மாதச் சம் பளம் வாங்குப வர்களுக்கு வருமான வரி படிவங்களை சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிப் பதாக மத்திய நேரடி வரி ஆணையத்தின் தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டில் வருமான வரி செலுத் தும் மூன்றரைக் கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாதச் சம்பளக்காரர்கள் தான். இவர்களின் வருமான விவரங்கள் எல்லாம் அவர்களின் நிர்வாகங்கள் வசமே இருக்கும். இம் முன்மொழிவு சில ஆண்டு களுக்கு முன்பே விவாதிக்கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இப்போதாவது ஜூலை 31 க்கு முன் பாக அடித்துப் பிடித்து ஓடிப்போய் வருமான வரி அலுவலகத்தில் வரிசையில் நிற்கும் பரபரப்பிற்கு விடிவு கிடைக்குமா என்று பார்க்கலாம்!

அரைக் கிணறு

கிராமங்களை நோக்கிய வங்கிச் சேவை என்கிற ரிசர்வ் வங்கியின் திட்டம் கர்நாடக மாநிலத்தில் அரைக் கிணற்றைக் கூட தாண்டவில்லை. 2000 மக்கள் வாழும் அனைத்துக் கிராமங் களிலும் வங்கிக் கிளைகளை அமைப் பது என்பதே திட்டம்.

மார்ச் 2011 க்குள் 2253 கிராமங்களில் வங்கிக் கிளைகளை திறப்பது என்பது இலக்கு. டிசம்பர் 31 வரை 1075 கிராமங் களில் மட்டுமே வங்கிக் கிளைகள் துவங்கப்பட்டுள்ளன. இது நிர்ணயிக் கப்பட்ட இலக்கில் 48 சதவீதம்தான்.

முதல் கிணறுக்கே இந்த பாடு ! 2012 மார்ச் இலக்கான 3395 கிராமங்களில் வங்கிக் கிளைகள் திறப்பது என்ற இலக்கை நோக்கி எப்படி முன்னேறுவது?

No comments:

Post a Comment