Friday, October 15, 2010

பாக்ஸ்கான் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இன்று சென்னை எல் ஐ சி அண்ணாசாலை மண்டல அலுவலகம் மற்றும் சென்னை அண்ணா நகர், வேலூர், கோயம்பத்தூர், சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி கோட்ட அலுவலகங்கள் முன்பாகவும் பாக்ஸ்கான் போராட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இதற்கான வேண்டுகோளை விடுத்திருந்தது.

தொழிற்சங்க உரிமைகளை பறிக்கிற முயற்சிகளை கைவிடுமாறும். தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகிற தந்திகள் எல்லா எல் ஐ சி கிளைச் சங்கங்களிடம் இருந்து தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மண்டல அலுவலகத்தின் முன்பு நடந்தேறிய ஆர்ப்பாட்டத்தில் சென்னை கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் உரை ஆற்றினார்.


---------- Forwarded message ----------
From: "S.Raman,Vellore"

Date: Fri, 15 Oct 2010 19:34:11 -0700 (PDT)
Subject: [SZIEF] New comment on ஃபாக்ஸ்கான் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

"தொழிலாளர் தோழன் நான்தான், பெரியார், அண்ணாவை
சந்திக்காவிட்டால் நானும் கம்யுனிஸ்டாக இருந்திருப்பேன்,
மேதினத்திற்காக விடுமுறை விட்டவன் நான்தான், மேதினப்பூங்கா
அமைத்தவன் நான்தான்"
இதெல்லாம் அவர் வழக்கமாக பீற்றிக் கொள்வது. அவர் கம்யூனிஸ்டாக
மாறாமல் போனது ஒரு நல்ல விஷயம். அப்படியே இருந்திருந்தாலும்
என்றோ அவர் திருப்பூர் ஆசாமி போல ஓடிப் போயிருப்பார்.
பாக்ஸ்கான் தொழிற்சாலைப் பிரச்சினையிலும் சரி
என்.எல்.சி ஒப்பந்த ஊழியர் போராட்டத்திலும்சரி
திமுகவின் தொ.மு.ச தனது கருங்காலி குணாம்சத்தின்படியே
நடந்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக்காலத்தில்
என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்தபோது
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடினார்கள்.
பங்குகளை தொழிலாளிகளுக்கு விற்கலாம் என ஆலோசனை வழங்கினார்
கருணாநிதி.

ஆனால் இந்த ஆலோசனையை ஏற்கமுடியாது என்று வெளிப்படையாகவே
என்.எல்.சி தொ.மு.ச அன்றைய தலைவர் ராஜ வன்னியன் கூற ,
போராட்டத்தில் தொ.மு.ச வும் தொடர்ந்தது. அதன் பின்தான்
அமைச்சரவை விலகல் என திமுக கூற அப்பிரச்சனை முடிவிற்கு வந்தது.
ஆனால் அடுத்து வந்த தொ.மு.ச தேர்தலில் ராஜ வன்னியன் தோற்றுப்
போவதை திமுக தலைமை உறுதி செய்தது. இது நெய்வேலி மக்கள்
அனைவரும் அறிந்த உண்மை.

உரிமைக்காக போராடிய பாக்ஸ்கான் தொழிலாளர்களை,
சி.ஐ.டி.யு வின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட
தலைவர்களை மீண்டும் மீண்டும்
கைது செய்கிறது பொய் வழக்கு போடுகிறது".
எஸ்
ராமன் ,வேலூர்

1 comment:

  1. Yes Com Raman.The attitude of TN govt reminds us the period of 70s when Sri M Karunanidhi declared that he would deal labour struggles with IRON HAND.But he should not forget that he was politically punished by the people of Tamilnadu for 13 long years as he could come back to power only in 1989.

    ReplyDelete