Showing posts with label THAILAND. Show all posts
Showing posts with label THAILAND. Show all posts

Friday, October 5, 2012

துண்டுப் பிரசுரம்

வரலாமா வால்மார்ட் ! வாழுமா சிறு வியாபாரம் !

கதவைத் திறந்துவிட்டார்கள் பன்னாட்டுப் பகாசுர சில்லறை வியாபாரிகளுக்கு...
உள்ளே நுழைகிற வெறியோடு வால்மார்ட், டெஸ்கோ, கேரி போர்...
நான்கு கோடி சிறுவியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாய்..

தாய்லாந்தில் 67 சதவீத கடைகளுக்கு மூடுவிழா!
மெக்சிகோவில் 21 ஆண்டுகளில் 50 சதவீதச் சந்தை அபேஸ்!                                      
இப்படி விழுங்குகிற அரக்க நிறுவனங்கள் எதற்காக!
உலகமயம் பேசுகிற மன்மோகன்சிங்கே உலக அனுபவம் தெரியாதா!
இந்தியச் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதில் என்ன ஆனந்தம்?

விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்று வாய்ப் பந்தல்!
பிரிட்டன் பால் உற்பத்தியாளர் சங்கம் கதறுவது என்ன ?
ஐரோப்பிய இணையம் நாடாளுமன்ற அறிக்கை சொல்வது என்ன ?
விவசாயிகளின் ரத்தம் குடிக்கிற ராட்சச நிறுவனங்களின் ஏகபோகம்!
மத்திய அரசே அளவில்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விடாதே!

அப்பாவி மக்களுக்கும் ஆப்பு!
போட்டிக் கடைகளையெல்லாம் ஒழித்துவிட்டால்...
அந்தப் பாவிகள் வைப்பதுதானே விலை..
பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி கெயித் வாஸ் என்ன சொல்கிறார்?
பார்த்து செய்யுங்கப்பா! சாமானிய மக்கள் பாவம்!
ஏன் இந்த அக்கறை சோனியாவுக்கு இல்லை!
இளவரசர் ராகுலுக்கு இல்லை..

கூடாரத்திற்குள் ஒட்டகம்!
10 லட்சம் மக்கள் உள்ள நகரங்களில்தான் அனுமதியாம்!
கட்டுப்பாடு அல்ல இது! அங்குதான் இப்ப லாபம் அதிகம்!
அடுத்த ரவுண்டு வருவார்கள் குறிவைத்து...  
விருதுநகர் வியாபாரிகளுக்கும்..
வித்துப்போட்டு பணத்தை எண்ணும் செல்லக்கண்ணுகளுக்கும்..

குழி தோண்டுகிறார்கள் ஜனநாயகத்திற்கு..
11 மாநிலங்கள் மட்டுமே ஒப்புதல் !
அங்குமட்டும் அனுமதியாம்! என்ன ஜனநாயகம் !
காங்கிரஸ் ஆளுகிற கேரளா அரசு கூட எதிர்ப்பு!
2002  ல் இதே மன்மோகன் சிங்கே எதிர்த்ததுதான்!

திருப்பூரில் சிறுதொழிலை அழித்தவர்கள் ..
விவசாயிகளின் தற்கொலைக்கு வழிவகுத்தவர்கள்..
அன்றாட விலைவாசி உயர்வை கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்கள்..
திவாலான அந்நிய வங்கி,இன்சூரன்ஸ் நிறுவனங்களை 
இந்தியாவில் அனுமதிக்கத் துடிப்பவர்கள்..
வருகிறார்கள் சிறு வியாபாரத்திற்கும்..

12 கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் சிறு வணிகம் அழிவதா!
பாடுபட்டு வளர்த்த இந்திய சிறுவணிகச் சந்தையை அன்னியர் விழுங்குவதா!
நம்மூர் ஜவுளிக் "கடல்கள்' வற்றிப்போவதா! 
பலசரக்கும்,மருந்தும்,காய்கறி, சோப்பு சீப்பு கண்ணாடி  இத்தியாதிகளும்
இரையாவதா !
கடைவீதிகள் காத்தாடுவதா!

இரக்கமற்ற அரசாங்கமே ! 
அனுமதிக்காதே அந்நிய முதலீட்டை! 
பறிக்காதே கோடிக்கணக்கானவர்கள் வாழ்வுரிமையை!