நிறைவு அடைந்த அலுவலகப் பணி ...
விரிந்த தளத்தில் தொடரும் பணி ...
பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (தெ .ம ) தலைவர் தோழர் பி.வி. நந்தகுமார்
30 .09.2012 அன்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி பணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை பொது இன்சூரன்ஸ் துறையில் வளர்த்தெடுப்பதில் அவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியதாகும். எளிமையான, எவரும் எளிதில் நெருங்கக் கூடிய, நெருக்கடி காலங்களில் சற்றும் தளராது தொழிற்சங்கப் பணி ஆற்றி வந்துள்ள தலைவர்.
தினக் கூலி ஊழியர்களை நிரந்தரப் பணி அமர்த்துகிற போராட்டத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியவர்.
செப் 29 அன்று சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கே.வேணுகோபால் பங்கேற்று பாராட்டினார்.தோழர் உ.வாசுகி (சி.பி.எம் மத்தியக் குழு உறுப்பினர்) தோழர் ஜே.குருமூர்த்தி (நிலைக்குழு செயலாளர் - பொது இன்சூரன்ஸ் - AIIEA ) தோழர் பீமாராவ் எம்.எல்.ஏ, தோழர் அப்பனு (சி.ஐ.டி.யு ) திருமிகு ஜெயமூர்த்தி (எஸ்.சி,எஸ்,டி ஊழியர் சங்கம்) தோழர் கோபால் (பெபி ) தோழர் கே.சுவாமிநாதன் (SZIEF) தோழர் எஸ்.ரமேஷ் குமார் (ICEU- சென்னை 1 ) தோழர் மனோகரன் (ICEU- சென்னை 2) உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
எதிர் காலத்தில் அமைப்பு சாராத் தொழிலாளர்களை திரட்டுவதில் தோழர் பி.வி.நந்தகுமார் ஈடுபட இசைவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment