Showing posts with label thol.thirumavalavan. Show all posts
Showing posts with label thol.thirumavalavan. Show all posts

Monday, November 19, 2012

தொல். திருமாவளவன் : அந்நிய முதலீட்டை வி.சி.க உறுதியாக எதிர்க்கும்

SAM_0195.JPG

நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு தமிழ் மாநில மாநாட்டில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமிகு தொல் .திருமாவளவன் இசைவு தெரிவித்து இருந்தார்.
ஆனால் அண்ணா அறிவாலயத்தில் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பு தாமதம் ஆனதாலும், போக்குவரத்து நெரிசலாலும் கருத்தரங்க மண்டபத்திற்கு உரிய நேரத்தில் வர இயலவில்லை. எனினும் தான் நேரில் வந்து சந்திப்பதாக கைபேசியில் தெரிவித்தார். மண்டபத்திற்கு வந்து அங்கு காத்திருந்த 40 க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.அந்நிய முதலீட்டிற்கு எதிராக வி.சி.க உறுதியாக குரல் கொடுக்கும் என்று கூறி இன்சூரன்ஸ் ஊழியர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.