பிப்.25-ல் நாகர்கோவிலில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்
First Published : 22 Feb 2011 12:14:34 PM IST
நாகர்கோவில், பிப்.21: நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள ஏ.வி.எம். திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படம் பிப். 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை திரையிடப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலரும், அம்பேத்கர் திரைப்பட திரையிடல் கூட்டமைப்பு அமைப்பாளருமான க. கணேசன் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், குமரி மாவட்ட சிஐடியூ, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், அம்பேத்கர் பாசறை, அம்பேத்கர் டிரஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.எஸ்.ஆர். ஓ. ஊழியர் சங்கம், ஐ.ஆர்.இ. எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் சங்கம், அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே ஊழியர்கள் சங்கம், மார்த்தாண்டம் நவஜோதி டிரஸ்ட், வில்லுக்குறி தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம், சால்வேஷன் ஆர்மி நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இத் திரைப்படத்தை காட்சிகள் வாரியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத் திரைப்படம் திரையிடுவதை பிப். 25-ம் தேதி அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடங்கி வைக்கிறார்.
No comments:
Post a Comment