இல்லங்களில் இனிமை பொங்கும் வேளை
காவிரிப் படுகை கவலை தீருமா நாளை?
களை பறித்து ஏரோட்டி காய்ந்த கைகள்
பொங்குகிற நெல்மணிகளின் பருக்கைகள்
மழைக்கு அஞ்சிய நகர வாழ்க்கை
தேங்கிய நீரை பார்க்கிற அசூயை
மழையை வரவேற்கும் கிராமப்பயிர்கள்
அதுவன்றி உண்டோ மண்ணில் உயிர்கள்
மஞ்சக் கிழங்கு கழுத்தோடு பானை
ஆறுகிற பசி ருசிக்கிற இனிமை
மறவோமோ இரண்டு லட்சம் உயிர்கள்
உலகமயப் பீடத்தின் பலிகள்
வறண்டு வறண்டு போன நதியாய்
மானிய வெட்டாய்.. வாழ்வை பறிப்பதாய்..
ஈவிரக்கமற்ற அரசின் கொள்கைகள்
ஒன்றாய் உயரவேண்டுமே நம் கைகள்
பொங்கட்டும் நம்மில் ஒற்றுமை
சாம்பலாகட்டும் சாதிய போகி
உலகமய மஞ்சுவிரட்டில் கொம்புகள்
வசமாகட்டும் நமது வலிய கரங்களில்
க.சுவாமிநாதன்
பொங்கட்டும் நம்மில் ஒற்றுமை
ReplyDeleteசாம்பலாகட்டும் சாதிய போகி
உலகமய மஞ்சுவிரட்டில் கொம்புகள்
வசமாகட்டும் நமது வலிய கரங்களில்
உழுபவன் கைகளில் நிலத்தையும்,
உழைப்பவன் கைகளில் நாட்டையும் கொடுப்போம்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/02/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...