Showing posts with label AMBEDKAR. Show all posts
Showing posts with label AMBEDKAR. Show all posts

Wednesday, October 17, 2012

Dr Ambedkar Centre at Cuddalore-Excerpts from News published in THE HINDU


Insurance employees’ union to run free coaching centres for SC/ST candidates

 
K.Swaminathan, general secretary of the South Zone Insurance Employees Federation delivering a speech at the LIC office, in Cuddalore.
K.Swaminathan, general secretary of the South Zone Insurance Employees Federation delivering a speech at the LIC office, in Cuddalore.
The All India Insurance Employees’ Association has been setting up ‘Dr. Ambedkar Education Employment Coaching Centres’, all over the State.

So far, the Association has formed 19 such centres and 161 more are in the offing, said K. Swaminathan, general secretary, South Zone Insurance Employees’ Federation Mr. K . Swamination made this announcement while inaugurating the coaching centre at Cuddalore on Saturday.

He further said that these centres were conducting coaching classes free of cost to aspiring Scheduled Castes/Scheduled Tribes candidates to appear for the competitive examinations.
It was done purely with the intention of giving a helping hand to the oppressed sections of the society who were in need of support and encouragement to face the competition and to come out with flying colours.

So far 19 centres had been started, including the one in Cuddalore, and the remaining would come up in phases. Secretary of the Insurance Corporation Employees’ Union V. Sugumaran said that, at present, 15 candidates were enrolled with the Cuddalore centre for undergoing coaching for the Village Administrative Officer examinations.

The next session would be for those appearing for the Railway Recruitment Board’s examinations.
Mr. Sugumaran said that the union had a tie up with the Tamil Nadu Government Teachers’ Association and the Private School Teachers’ Association to mobilise the resource persons.

The members would also rope in college lecturers and professors to handle the coaching classes. The Dr. Ambedkar Education Employment Coaching Centre in Chennai would be supplying the study materials on a centralised basis.

Except the examination fees, the candidates need not bear any other expenses on the coaching, Mr. Sugumaran added.

Earlier, Mr. Swaminathan distributed relief materials to 20 families who were affected by Cyclone Thane.

Sunday, February 27, 2011

Film on AMBEDKAR AT NAGARKOIL- AIIEA plays significant role- Com K SWAMINATHAN, PARTICIPATED THE RALLY AND FUNCTION HAILING ITS RELEASE ON FIRST DAY

பிப்.25-ல் நாகர்கோவிலில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்

First Published : 22 Feb 2011 12:14:34 PM IST


நாகர்கோவில், பிப்.21: நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள ஏ.வி.எம். திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படம் பிப். 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை திரையிடப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலரும், அம்பேத்கர் திரைப்பட திரையிடல் கூட்டமைப்பு அமைப்பாளருமான க. கணேசன் வெளியிட்ட அறிக்கை:

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், குமரி மாவட்ட சிஐடியூ, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், அம்பேத்கர் பாசறை, அம்பேத்கர் டிரஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.எஸ்.ஆர். ஓ. ஊழியர் சங்கம், ஐ.ஆர்.இ. எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் சங்கம், அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே ஊழியர்கள் சங்கம், மார்த்தாண்டம் நவஜோதி டிரஸ்ட், வில்லுக்குறி தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம், சால்வேஷன் ஆர்மி நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இத் திரைப்படத்தை காட்சிகள் வாரியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத் திரைப்படம் திரையிடுவதை பிப். 25-ம் தேதி அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடங்கி வைக்கிறார்.

Tuesday, December 7, 2010

தென்காசியில் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கம்



அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று
அம்பேத்கர் நினைவுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் கே ஜி பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். தோழர் வடிவேல் தலைமை தாங்கினார். தோழர்கள் ராமநாதன் (BSNLEU) தாணுமூர்த்தி (CITU) செ. முத்துக் குமாரசாமி (AIIEA) ஆகியோர் உரை ஆற்றினார்.

Monday, December 6, 2010

OBSERVANCE OF Dr AMBEDKAR DEATH ANNIVERSARY BY AIIEA UNITS IN TAMILNADU

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் - டிச 6

இன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். திருநெல்வேலி, மதுரை, சேலம் கோட்டங்களில் மாலை நேர கருத்தரங்கங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை - 2 கோட்டத்தில் பாம்பே மீச்சுவல் கட்டிடத்தில் சிறப்பு வாயிற் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. திருநெல்வேலியில் தோழர் கே சாமுவேல் ராஜ் ( தீண்டாமை ஒழிப்பு முன்னணி ) சேலத்தில் தோழர் ) கே கணேசன் ( கோவை அம்பேத்கர் கல்வி மையம்) மதுரையில் தோழர் ச. தமிழ்ச்செல்வன் ( த மு எ க ச ) சென்னை 2 ல் தோழர் கே சுவாமிநாதன் (SZIEF ) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கங்களில் மூன்று மையங்களிலுமே 125 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் கடுமையான மழைக்கு மத்தியிலும் 75 பேர் பங்கேற்றனர்.

அம்பேத்கர் திரைப்படம் தடைகளை மீறி வெளி வந்திருப்பதும், அதற்கு திரைப்பட உலகின் முற்போக்காளர்களும், த மு எ க ச , தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் எடுத்த முயற்சிகள் அனைவரும் அறிந்ததே. சேலத்தில் 4 காட்சிகள் முழுமையாக நமது சங்கத்தால் முன் பதிவு செய்யப்பட்டு ஓர் இயக்கமாகவே அதிகாரிகள் , ஊழியர்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சென்னையில் இப் படம் வெளியிடப்பட்ட டிச 3 அன்று எக்மோரில் இருந்து ஆல்பர்ட் தியேட்டர் வரை இசையோடு பேரணி நடந்தேறியது. நமது சங்கத்தின் சென்னை 1 , சென்னை 2 கோட்டங்கள் , பொது இன்சூரன்ஸ், BSNLEU , BEFI ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆல்பர்ட் தியேட்டரில் டிச 12 அன்று காலைக்காட்சிக்கு 400 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் அலங்கார் தியேட்டரில் டிச 7 அன்று நமது சங்கத்தின் சார்பில் சிறப்புக் காட்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு கூட்டத்தில் - டிச 4 , சென்னை- நமது தோழர்கள் த செந்தில்குமார், பி கவிமணி ஆகியோர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் இம் முன்னணி சார்பில் " வெண்மணி " என்ற பெயரில் ஓர் காலாண்டு இதழைக் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் குழுவில் தோழர் க சுவாமிநாதன் இணைக்கப்பட்டுள்ளார்.

வேலூர், கோவை, சென்னை 1 கோட்டங்களிலும் அம்பேத்கர் நினைவு நாள் சமுக நீதி பாதுகாப்பு நாளாக கருத்தரங்கங்கள், சிறப்பு வாயிற் கூட்டமாக நடந்தேறவுள்ளன.

Saturday, December 4, 2010

Dr AMBEDKAR DEATH ANNIVERSARY - DEC 6TH


“Emerson has said that consistency is a virtue of an ass. No thinking human being can be tied down to a view once expressed in the name of consistency. More important than consistency is responsibility. A responsible person must learn to unlearn what he has learned. A responsible person must have the courage to rethink and change his thoughts. Of course there must be good and sufficient reason for unlearning what he has learned and for recasting his thoughts. There can be no finality in rethinking.”

-Dr B.R. Ambedkar

Sunday, November 14, 2010

ஒடுக்குமுறையின் இன்னொரு முகம்

க. சுவாமிநாதன்
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு,


Venmani dead bodies






















இந்தியச் சமுகத்தின் ஒடுக்குமுறை பொருளியல் தளத்தில் மட்டுமின்றி சமுக தளத்திலும் வெளிப்படுவதாகும். இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் கவனமும், வினைகளும் இப் புரிதலோடு அமைய வேண்டுமென்பதை நமக்கு உணர்த்துகிற மண்தான் வெண்மணி. நெருப்பிற்கு இரையான அவ்வீரத்தியாகிகளுக்கு சி ஐ டி யு எழுப்பி வருகிற வெண்மணி நினைவாலயம் இச் செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லப்போகிறது. இந் நினைவாலய நிர்மாணத்திற்கு தமிழக இன்சூரன்ஸ் ஊழியர்களும் தங்களின் உணர்வு பூர்வமான பங்களிப்பாக ரூ 2 லட்சம் வழங்கியதை நெகிழ்வோடு நினைவு கூர்கிறேன்.

ஒடுக்குமுறையின் பன்முகங்களை நோக்கிய நமது எதிர்வினைகளை ஒருமுகப்படுத்தும்போதுதான் நம்முடைய போராட்டத்தின் விரிவும் முழுமை பெறும். இலக்குகளை நோக்கியும் முன்னேற இயலும். ஒரு புறம் தலித்-பெண்-சிறுபான்மையினரை மையமாகக் கொண்ட அடையாள அரசியல் அவர்களின் குமுறல்களுக்கு வடிகால் அமைக்கிற உத்தியோடு அவர்களை விரிந்த போராட்ட களத்திலிருந்து பிரித்து வைக்கிறது. மறு புறம் பொது நீரோட்டம் என்ற பெயரில் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பில் இருக்கிற வர்க்க உள்ளடக்கத்தை மறுதலிக்கிற ஊனமும் அரங்கேறுகிறது. பாலின சமத்துவம், சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு, சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றுக்கான போராட்டம் தொழிற்சங்க, வெகுஜன, முற்போக்கு அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமையை பெறும்போதுதான் உண்மையான ஒற்றுமையை, திரட்டலை உறுதி செய்ய முடியும். இதுவே தோழர் சீனிவாச ராவ் வெண்மணி மண்ணில் நிகழ்த்தி காட்டிய போராட்டம்.

இன்றைக்கு தமிழ் மண்ணில் CITU , AIIEA உள்ளிட்ட அமைப்புகள் உருவாக்கியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது இச் சிந்தனைக்கு அளிக்கப்பட்டுள்ள செயல் வடிவமாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இம் முன்னணி 100 மையங்களுக்கும் மேலாக தனது நேரடித் தலையீடுகளைச் செய்திருக்கிறது. உத்தப்புரம், காங்கையனூர், செட்டிபுலம், பந்தபுளி ஆகிய போராட்டக் களங்கள் அனைத்தையும் முன்னின்று நடத்திய அமைப்பு. கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் தீண்டாமை நிலவுகிறது என்பதை அம்பலப்படுத்தி கோவை பெரியார் நகர் தடுப்புச் சுவரை தகர்த்தெறியச் செய்த அமைப்பும் இதுவாகும். சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பின் அடையாளங்களாக திகழ்கிற அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிற அமைப்பாகவும் இது வளர்ந்துள்ளதென பலரும் பாராட்டுகிறார்கள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சமுக நீதி, சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பில் 1980 களில் இருந்தே மிகச் சரியான நிலையினை எடுத்து வந்துள்ள அமைப்பாகும். 1980 களின் துவக்கத்தில் குஜராத்தில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு முழு அடைப்பு நடைபெற்ற போது அதை மறுதலித்து தனது உறுப்பினர்களை அலுவலகத்திற்கு போகச் சொன்ன அமைப்பாகும் AIIEA . அதற்காக இச் சங்கத்தின் தலைவர்கள் அலுவலக வாயில்களிலேயே தாக்கப்பட்டு காயத்திற்கு ஆளாகினர் என்பது வரலாறு. 1985 ல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு இந்தூரில் (மத்திய பிரதேசம்) நடைபெற்றபோது தோழர் சுனில் மித்ரா ( சங்கத்தின் இணைச் செயலாளராகவும் , பின்னாளில் CPI (M ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமாக இருந்த முது பெரும் தலைவர்) குஜராத்தில் காயம்பட்டவர்களை பாராட்டிவிட்டு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான சங்கத்தின் நிலையை தெளிவாக அறிவித்தார். பல நடுத்தர வர்க்க அமைப்புகள் ஒற்றுமை என்ற பெயரில் மௌனம் சாதித்த சூழலையும்,
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மிகப் பெரும் வன்முறை தூண்டிவிடப் பட்ட காலத்தையும் இணைத்து இன்று சிந்தித்தால்தான் AIIEA வின் கொள்கை உறுதியை நம்மால் உணர இயலும்.

தமிழகத்திலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் குறிப்பிடத்தக்க பணியை ஆற்றி வருகிறது.

* மேலவளவு தலித் பஞ்சாயத்துத் தலைவர் திரு.முருகேசன் படுகொலை செய்யப்பட்டபோது அக் கிராமத்திற்கு சென்று தலித் மக்களுக்கு நிவாரணம்.

* மதுரை மந்திகுளம் கருவானூரில் தலித் குடிசைகள் தீக்கிரை ஆக்கப்பட்டபோது உடனடியாக சென்று நிவாரணம்.
* தூத்துக்குடி மாவட்டம் நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக சங்கத் தலைமை ஆற்றிய குறிப்பிடத் தக்க பணி.

* மதுரை மாவட்டக் கள ஆய்வில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்தி உத்தபுரம் சுவர் உள்ளிட்ட தீண்டாமை வடிவங்களை அம்பலப்படுத்திய பணி. உத்தப்புரம் சுவருக்கு எதிரான இயக்கங்களில் 100 க்கும் மேலானவர்களை ஈடுபடுத்தியதும், வழக்கிற்க்கான ஆவணப் பணிகளில் முன்னின்று காவல் துறைத் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்ததுமான செயல்பாடுகள்.

* தமிழகம் முழுமையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிப் பணிகளில் திரளான உறுப்பினர்களை பங்கேற்கச் செய்தல். சென்னை, மதுரை நகரக் கள ஆய்வுகளில் நிறைய பேரை ஈடுபடச் செய்தது. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சங்கத்தின் சார்பிலேயே விரிவான கள ஆய்வினை நடத்தியது.

* கோயம்பத்தூரில் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தை உருவாக்கி தொடர்ச்சியாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தமிழக அரசுப் பணி குரூப் 2 தேர்வு. ஆங்கில உரையாடல் ஆகியவற்றுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய இப் பணிகள் எல்லாம் பட்டியலுக்காக தொகுக்கப்படவில்லை. இதில் சில விடுபட்டிருக்கலாம். அவையும் பெரிய விசயம் அல்ல. காரணம், நாம் செய்ய வேண்டியதும், செல்லவேண்டியதும் நிறைய உள்ளன. அந்த இடைவெளியே நம் கவனத்திற்கும், கவலைக்கும் உரியது.

வெண்மணியில் எழும்புகிற நினைவாலயம் ஓர் வரலாற்றுச் சின்னம். வரலாற்றை அறியாத, உள்வாங்காத இயக்கத்திற்கு எதிர்காலம் இருக்க முடியாது. இலக்கும் கைவசப்படாது. சி ஐ டி யு உருவாக்குகிற இக் கம்பிரமான நினைவுச் சின்னம் தமிழக தொழிலாளர் வர்க்கத்தின் மீது காலம் சுமத்தியுள்ள வரலாற்றுக் கடமையை நினைவுபடுத்துவதாகும். ஆம் ! சாதியம் வேறு முகம் அல்ல. ஒடுக்குமுறையின் இன்னொரு முகம். இதனையும் எதிர்க்காமல் விடியல் இல்லை.

( சி ஐ டி யு வின் வெண்மணி நினைவாலய மலருக்கான கட்டுரை)